அடுத்தடுத்து உலக சாதனை செய்த நியுசிலாந்து அணி. விவரம் உள்ளே

சமீபத்தில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந் கிரிக்கெட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அயர்லாந்தின் பந்து வீச்சை நொறுக்கித்தள்ளிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தது. தற்போது மீண்டும் ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. நியூசிலாந்து- அயர்லாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டப்ளின் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 440 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து வீராங்கனை 17 வயதான அமெலியா கெர் 145 பந்துகளில் 232 ரன்கள் விளாசி இரட்டை சதம் நொறுக்கிய 2-வது வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். இதில் 31 பவுண்டரிகளும் , 2 சிக்சர்களும் அடங்கும். அது மட்டுமின்றி பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையையும் புரிந்திருக்கிறார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பெலின்டா கிளார்க் எதிராக 229 ரன்கள் எடுத்ததே தனிநபர் அதிகபட்சமாக இருந்தது. அவரது 21 ஆண்டு கால சாதனைக்கு அமெலியா கெர் முடிவுவுக்கு கொண்டுவந்துள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news