ஆஸ்கார் நாயகனை அமெரிக்காவில் சந்தித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி. புகைப்படம் உள்ளே

 

அமெரிக்காவில் நடந்த இசை திருவிழாவை காண நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியாக கலிபோர்னியா சென்றார்கள். புகழ்பெற்ற சர்வதேச இசைக் கலைஞர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். இசை நிகழ்ச்சியில் இருவரும் எடுத்து கொண்ட செல்பி புகைபடத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளுக்காக அவரை அமெரிக்கா அழைத்து சென்றிருந்தார் நயன்தாரா. இப்போது இருவரும் கலிபோர்னியாவில் விடுமுறையை கொண்டாடி வருகிறார்கள். சென்னை திரும்பிய பிறகு அஜீத்தின் விஸ்வாசம் பட ஷூட்டிங்கில் நயன்தாரா பங்கேற்கிறார் என கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இசைப்புயல் எ.ஆர்.ரஹ்மானை சந்தித்துள்ளனர். அப்போது அவர் மூவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசைப்புயல் எ.ஆர்.ரஹ்மான் அவர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Inandoutcinema Scrolling cinema news