September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

Nonlinear பாணியில் கதை சொல்வது தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட் : இரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனர் பெருமிதம்

சென்னை: அருள்நிதி, மஹிமா நம்பியார், அஜ்மல் நடித்திருக்கும் படம் ’’இரவுக்கு ஆயிரம் கண்கள்’’ இன்றுமே 11ம் தேதி ரிலீஸ் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் மு.மாறன் இப்படத்தை இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்பு பத்திரிக்கை துறையில் பணியாற்றி உள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் ஜி டில்லிபாபு தயாரிக்கிறார்.

அடிப்படையில் எழுத்தாளரான இயக்குனர் மாறன், இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் புதுவிதமான கதைசொல்லும் திறனை  கையாண்டிருக்கிறார்.”Non linear எனப்படும் பாணியில் கதைசொல்வது  தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்.

இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு சுஜாதா, பாலகுமாரன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் எழுதிய துப்பறியும் நாவல்களின் பிரபல கதாபாத்திர பெயர்களை சூட்டியிருக்கிறார் இயக்குனர்.

படத்தில் நடித்தவர்கள் பற்றி இயக்குனர் மாறன் கூறும்போது: பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் ஆரம்பத்தில் அருள்நிதியுடன் வேலை செய்வது பதட்டமாக இருந்தது. ஆனால் சில நாட்களிலேயே நான் அசௌகரியமாக உணர்வதை புரிந்து கொண்டு வந்து இயல்பாக பழகினார்.

மொத்த படப்பிடிப்பிலும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். தனி ஒருவன் படத்தில் ஆரம்பத்தில் நடிக்க அஜ்மலை அணுக, அந்த வாய்ப்பை தவறவிட்டதில் வருத்தத்தில் இருந்தார். இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்று உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார்.

அருள்நிதி, அஜ்மல் மோதும் சண்டைக்காட்சி படத்தின் ஒரு பெரிய ஹைலைட். மஹிமா நம்பியார் நர்ஸாகவும், வித்யாபிரதீப் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். 60% படப்பிடிப்பு இரவிலும், பெரும்பாலான காட்சிகள் மழையிலும் எடுக்கப்பட்டுள்ளது. அருள்நிதி, ஆனந்தராஜ் இருவரும் கடுமையான காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்துக் கொடுத்தனர்.

ஆனந்தராஜ் காட்சிகள் நகைச்சுவையாகவும் இருக்கும் இவ்வாறு இயக்குனர் மாறன் கூறினார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news