நோ டைம் டூ டை ; வெளியானது புதிய ஜேம்ஸ் பாண்ட் பட டீசர்

ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரை சாகாவரம் பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் முக்கியமானவர் ஜேம்ஸ்பாண்ட். அதனாலேயே கிட்டத்தட்ட மூன்று வருட கால இடைவெளிகளில் தொடர்ந்து வெளியாகும் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு என உலகம் முழுவதும் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. அந்தவகையில் கடந்த 2015 வெளியான ஸ்பெக்ட்ரே படத்தை தொடர்ந்து தற்போது ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் அடுத்ததாக ‘நோ டைம் டு டை’ என்கிற படம் உருவாகியுள்ளது.

இதற்கு முந்தைய நான்கு படங்களிலும் ஜேம்ஸ்பாண்ட் ஆக தொடர்ந்து நடித்து வரும் டேனியல் கிரேக் தான் இந்த படத்திலும் ஜேம்ஸ்பாண்டாக அசத்தியிருக்கிறார். வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் 30 வினாடி டீசர் தற்போது வெளியாகி உள்ளது. டீசரை பார்க்கும்போதே வழக்கம்போல ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இடம்பெற்றிருப்பது நன்றாகவே தெரிகிறது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news