September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

“பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” – விளம்பர தூதர்களாக விவேக், சூரியா, ஜோதியா, கார்த்தி நியமனம்

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் வகையில் “பிளாஸ்டிக் இல்லா தமிழகம்” என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 2019ம் ஆண்டு முதல்  பிளாஸ்டி பொருட்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு தடை செய்யப்படும் என்று கடந்த ஜூன் மாதம் சட்டபேரவை கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து முதற்கட்டமாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழத்தில் பயன்படுத்தவும், கடைகளில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், மாவட்டம் தோறும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு பிரசாரங்கள், விழிப்புணர்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பிளாஸ்டிக்  பயன்பாட்டை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் “பிளாஸ்டிக் இல்லா தமிழகம்” என்ற பெயரில் விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

மேலும், அது தொடர்பாக ஒரு இணையத்தளத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “தமிழகத்தில் பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு பரப்புரை விளம்பர தூதராக நடிகர் விவேக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விவேக்கைத் தொடர்ந்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோரும் பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.

அவர்கள் ஷூட்டிங் இருக்கும் காரணத்தால் வர முடியவில்லை என தெரிவித்த்துள்ளனர்.  முதற்கட்டமாக ஒருமுறை பயன்படுத்திய  பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கக் கூடாது. அமைச்சர்கள் பிளாஸ்டிக் கோப்புகளுக்கு பதிலாக இன்று முதல் காகித கோப்புகளை பயன்படுத்துவார்கள்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தால் ஆரோக்கியமான வாழ்வு அமையும். தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த குறும்படம், லோகோ வெளியிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஒ.பன்னிர் செல்வம், தலைமை செயலாளர் கிரிஷா வைதியநாதன், அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news