September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

நயன்தாராவை தவிர இந்த முடிவை யாரும் எடுக்க மாட்டார்கள் – நடிகர் அதர்வா

டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருந்தது. அதை பூர்த்தி செய்யும் விதமாக படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்னிலையில் நடிகர் அதர்வா சக நடிகர்களை பற்றி சமீபத்தில் பேட்டியில் கூறியதாவது : நயன்தாரா மேடத்தை விட யாரையும் அந்த கதாபாத்திரத்தில் எங்களால் யோசிக்க முடியவில்லை. சிபிஐ அதிகாரி அஞ்சலியாக அவரை பார்த்து நீங்கள் வியந்து போவீர்கள். இந்த படத்துக்காக அவருடைய அர்ப்பணிப்பு அபரிமிதமானது.

தன் நீண்ட கூந்தலை கதாபாத்திரத்திற்காக வெட்டி விட்டு வந்தார். குறிப்பாக பல படங்களில் பிஸியாக நடித்து வரும் எந்த ஒரு நாயகியும் இந்த முடிவை எளிதாக எடுக்க மாட்டார்கள். அக்கா, தம்பியாக எங்கள் உறவு, சமகால உறவை பிரதிபலிக்கும். ராஷி கண்ணா காட்டிய நம்ப முடியாத ஈடுபாட்டை பாராட்டியே தீர வேண்டும்.

அவர் உதடசைவுகளையும், உச்சரிப்புகளையும் கூட கவனத்தில் வைத்திருந்தார். அனுராக் காஷ்யப் சார் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அவர் நம் எல்லோரையும் அவருடைய மிரட்டலான நடிப்பால் பயமுறுத்தினார் என நடிங்கர் அதர்வா கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news