September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

சத்தமே இல்லாமல் விஜய்சேதுபதி செய்த காரியத்தை பாருங்கள்

சென்னை: கேரளாவில் பெய்து வரும் பருவ மழையால் அந்த மாநிலத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். ஏராளமான உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது.

கேரள மக்களுக்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள் பணம், பொருட்கள், அத்தியாவசிய தேவைகளை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், கேரளாவில் பருவ மழை இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து கேரள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதற்கான பணிகள், பிரசாரங்கள், விழிப்புணர்வுகளை டிவிட்டர், பேஸ்புக், வாட்சப் போன்ற சமூக தளங்கள் மூலம் பொதுமக்கள், சமூக ஆர்வகர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தமிழ் சினிமா துறை சார்பில் ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. நடிகர்கள் சூரியா, கார்த்தி, விஷால், சித்தார்த், தென்னிந்திய நடிகர் சங்கம், கமல், ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் தங்களால் முடிந்த உதவிகள் செய்து வருகின்றனர்.

இதனிடையே, கேரள மக்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி சைலண்டாக 25 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இந்த தொகையை அவர் அம்மாநில முதல்வர் நிவாரண நிதியில் அளித்துள்ளார். இதுகுறித்து, கேரள செய்திகளில் தகவல் வெளியாகி உள்ளது. சத்தமே இல்லாமல் பல நல்ல காரியங்களை செய்து வரும் விஜய் சேதுபதி கேரள மக்களுக்கும் உதவுவதிலும் தவரவில்லை. – ஆசம் பிரதர்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news