Inandoutcinema - Tamil cinema news

நம்மை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது! – ரஜினி அறிக்கை

சென்னை: “பேட்ட” படத்தின் சூட்டிங்கை முடித்த கையுடன் ரஜின் கட்சிப்பணிகளை கவணிக்க தொடங்கி விட்டார். இந்நிலையில் மக்கள் மன்ற தலைவர் நடிகர் ரஜினிகாந்த்  ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: என்னை வழவைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு, நான் கடந்த 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மன்ற செயல்பாடுகளை குறித்து சில உண்மைகளை சொல்லி இருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும் அதில் உள்ள உண்மையையும், நியாயத்தையும் புறிந்துகொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களைப் போன்ற ரசிகர்களை அடைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும் உங்களையும் எந்த சக்தியாளும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்.ஆன்புடன் ரஜினிகாந்த். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி நடிகர் ரஜினிகாந்த் தனது அறிவிப்பை வெளியிட்டு ஓர் ஆண்டு நெருங்கும் நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ‘கட்சி பணிகள் 90 சதவிதம் முடிந்துவிட்டதாகவும் விரைவில் கட்சி தொடக்கும் அறிவிப்பு வெளியாகும்’ என்று அறிவித்தார். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, மன்ற விதிமுறைகளை மீறியதாக 15 பேரை மக்கள் மன்றத்தை விட்டு நீக்கினார்.

இதற்கு நிர்வாகிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் நீக்கப்பட்ட நிர்வாகிகளால் மன்றத்தில் உள்கட்சி பூசல் ஏற்பட வாய்ப்புள்ளது இதன் காரணமாகவே ரஜிதி தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news