எங்கள் நட்பு, ஜருகண்டி படத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை – நிதின் சத்யா

நடிகர் ஜெய் நடிப்பில் இயக்குனர் ஏ.என். பிட்சுமணி எழுதி இயக்கியுள்ள திரைப்படம்தான் ஜருகண்டி ஆகும். இந்த படத்தை நடிகரும் மற்றும் ஜெய்யின் நெருங்கிய நண்பரான நிதின் சத்யா தயாரித்துள்ளார். ஜருகண்டி திரைப்படம் ஒரு தமிழ் நாடக நகைச்சுவை திரைப்படமாகும். இயக்குனர் ஏ.என். பிட்சுமணியின் இயக்குனர் வெங்கட் பிரபுவின் முன்னாள் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஜெய், ரீமா மோனிகா ஜான், அமித் திவாரி, டேனியல், ரோபோ சங்கர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாபோ சாஷி இசையமைப்பாளராகவும், ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இன்னிலையில் ஜருகண்டி படத்தின் கதாநாயகன் ஜெய் பற்றி படத்தின் தயாரிப்பாளரான நிதின் சத்யா கூறியதாவது : கூறியதாவது : இந்த படத்தின் மூலம் ஜெய் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பது இந்த படத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை.

உண்மையில், அவர் முன்பு இருந்ததைவிட அதிக பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டார். படப்பிடிப்பு முழுவதும் நல்ல முறையில் நடக்க முழு ஒத்துழைப்பை கொடுத்தார். அவர் தன்னை ஒரு சிறந்த நடிகனாக மேம்படுத்த மிகவும் முயற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார் என நிதின் சத்யா கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news