News

விஸ்வாசம் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்ற தல அஜித். வைரலாகும் புகைப்படம்

Sunday, May 06, 2018



விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடிக்க இருக்கிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தில் ரோபோ சங்க, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பது குறிப்பிடத்தக்கது. 

விஸ்வாசம் திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், கடந்த 1 ½ மாதம் சினிமா ஸ்ட்ரைக்கால் அனைத்து படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விஸ்வாசம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.  விஸ்வாசம் படத்தின் படபிடிப்பு வரும் இம்மாதம் தொடங்கப்படும் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் விஸ்வாசம் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக தல அஜித் ஐதராபாத் புறப்பட்டுள்ளார். இதற்காக அவர் சென்னை விமான நிலையம்சென்றுள்ளார். அப்போது தல அஜித்தை ரசிகர்கள் படமெடுத்துள்ளனர். ரசிகர்களால் எடுக்க்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.