Category: Sports

மூன்றாவது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

நாக்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. ராகுல் 52 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 62 ரன்களும் சேர்த்தனர். தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியின் முகமது நெய்ம் 81 ரன்களைக் குவித்தார். மிதுன் 27 ரன்கள் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். அபாரமாக […]

பிங் நிற பந்தில் விளையாட உள்ள அணிகள்…

ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் நவம்பர் 12ம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டியை பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக நடத்துவதற்கு வங்கதேச கிரிக்கெட் சங்கத்திடம் பிசிசிஐ சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. பிசிசிஐயின் பரிந்துரை கடிதத்தை பெற்றுக்கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணி, போட்டிக்கு குறைவான நாட்களே உள்ளதால், பிங்க் நிற பந்தில் வங்கதேச வீரர்கள் பயிற்சி பெற போதிய கால அவகாசம் கிடைக்காது என்று கருதி, அது குறித்து வங்கதேச வீரர்களுடன் ஆலோசித்து வந்தது. இந்த நிலையில் இந்தியாவுடன் […]

புதிய பி.சி.சி.ஐ., தலைவராக – கங்குலி…

 ஐ.பி.எல்., தொடரில்(2013) வெடித்த சூதாட்டத்தை அடுத்து, பி.சி.சி.ஐ.,யை நிர்வகிக்க வினோத் ராய் தலைமையில் கிரிக்கெட் நிர்வாக குழு (சி.ஓ.ஏ.,) அமைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மும்பையில் இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில், முன்னாள் கேப்டன் கங்குலி புதிய பி.சி.சி.ஐ., தலைவராக பதவி ஏற்க உள்ளார். இதையடுத்து 33 மாதங்களாக இருந்த நிர்வாக குழுவின் கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாப்தே தலைமையிலான இரு நபர் அமர்வு […]

விக்ரம் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்!!?

பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான். லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்தார், அதன்பிறகு நட்சத்திர வீரர் ஆனார். இப்போது சினிமா நடிகராகவும் ஆகிறார். அதுவும் தமிழில். டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கிறார். அவருடன் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் […]

முதல் 5 இடங்களில் இரண்டு இந்தியர்கள்…

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடத்தை இழந்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை பெற்றுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 2வது டெஸ்ட்டில் கோலி டக்அவுட் ஆனதால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 903 புள்ளிகளுடன் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் 904 புள்ளிகளுடன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 878 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி வீரர் வில்லியம்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார். […]

விராட் கோலின் புதிய சாதனை!!

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கு இந்திய தீவுகளில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் களமிறங்கிய கோலி அபாரமாக விளையாடி சதமடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும், இப்போட்டியில் 32ஆவது ஓவரில் அவர் விளையாடிக்கொண்டிருந்தபோது ஒட்டுமொத்தமாக 11,363 ரன்களைக் கடந்து, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். இதன் மூலம் அதிக ரன்கள் […]

இந்திய கிரிக்கெட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!?

தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் குழுமத்தின் துணை தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் பிசிசிஐயில் பொறுப்பில் இருக்கும் நபர், ஐபிஎல் அணிகளுக்கு தொடர்புடைய நிறுவனத்தின் பொறுப்பில் இருப்பது விதிகளுக்கு முரணானது என்று மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சீவ் குப்தா புகார் கொடுத்ததை அடுத்து, ராகுல் டிராவிட்டுக்கு பிசிசிஐயின் நன்நெறி அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்நிலையில் […]

மலிங்காவுக்கு பிரியா விடை கொடுத்த சக வீரர்கள்!

வங்கதேசம் அணிக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் லசித் மலிங்கா ஓய்வு பெற்றார். நேற்று நடந்த இந்தப் போட்டியில் அவர் 38 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். போட்டிக்குப் பின்னர் பேசிய அவர், 15 ஆண்டுகள் இலங்கை அணிக்காக விளையாடி இருப்பதாகவும், தாம் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்று கூறினார். தனக்கான நேரம் முடிந்து விட்டதாகவும் மலிங்கா உருக்கமுடன் குறிப்பிட்டார். இதை அடுத்து […]

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து லசித் மலிங்கா ஓய்வு!

மலிங்கா, இலங்கை அணிக்காக 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகக் கோப்பைத் தொடர்களில் இரு முறை ஹாட் டிரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்ற இவர், 15 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் தாம் ஓய்வு பெற உள்ளதாக லசித் மலிங்கா தன்னிடம் தெரிவித்தார் என்று இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே கூறியுள்ளார். வரும் […]
Page 1 of 1912345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news