News

பிரம்மாண்ட சாதனை செய்த அதிரடி ஆட்டக்காரரான ரோஹித் சர்மர். விவரம் உள்ளே

Saturday, May 05, 2018



இந்திய கிரிக்கெட் அணியின் ஆதிரடி ஆட்டக்காரரான ரோஹித் சர்மா கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது மீண்டும் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டி-20 கிரிக்கெட்டில், 300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்தியர்' என்ற பெருமையை மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார். கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின்போது, முஜிபுர் ரஹ்மான் வீசிய 17-வது ஓவரில் இந்த சாதனையை பெற்றுள்ளார். 

மும்பையைச் சேர்ந்த ரோகித் சர்மா, 78 சிக்ஸர்களை சர்வதேச போட்டியிலும் 183 சிக்ஸர்களை ஐபிஎல் தொடரிலும் அடித்துள்ளார். சாம்பியன்ஸ் லீக், சையத் முஸ்டாக் அலி தொடர்களில் 40 சிக்ஸர்களும் அடித்துள்ளார். அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 844 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். பொல்லார்ட் 555, பிரன்டன் மெக்கல்லம் 445, ட்வைன் ஸ்மித் 376, டேவிட் வார்னர் 319, ரோகித் 301 சிக்ஸர்களை விளாசியுள்ளனர். ஐபிஎல் போட்டியிலும் கெயில்தான் அதிக சிக்ஸ்சர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். இவர் கணக்கில் 290 சிக்ஸர்கள் உள்ளன. ரோகித்துக்கு பட்டியலில் இரண்டாவது இடம். தோனி , சுரேஷ் ரெய்னா தலா 180 சிக்ஸர்களும் ஏபி டிவில்லியஸ் 179 சிக்ஸர்களும் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.