Category: Nature

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை…

அதிகாலையில் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. சேப்பாக்கம், ராயப்பேட்டை, மெரினா, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் நனைந்தவாறே சென்றனர். பலத்த மழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் விடாத அடைமழை பெய்து வருகிறது. மேடவாக்கம்,கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், அஸ்தினாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

விடிய,விடிய கொட்டி தீர்த்த கனமழை!!

சென்னை அருகே தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டியது. இதேபோல் பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், திருநீர்மலை, திரிசூலம், சேலையூர், முடிச்சூர், செம்பாக்கம், கீழ்கட்டளை, பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்றுடன் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னை நகரில் பல இடங்களில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கன மழை கொட்டியதால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை […]

2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தெற்கு மற்றும் உள்மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். மேலும் கோவை, நீலகிரி, தேனி,  திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, நாமக்கல், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் […]

டெல்லி போன்று தமிழகத்தில் சென்னையில் காற்று மாசு!?

திருச்சி ஜங்ஷன் கலையரங்க வளாகத்தில், நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், காற்று மாசு குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து கவனித்து வருவதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லாத 9 ஆயிரத்து 940 ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திறந்து கிடக்கும் சாலையோர கிணறுகள் மற்றும் […]

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மழை..

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், மோரனப்பள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் தொடர் மழையால் கெலவரப்பள்ளி […]

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் கூறியதாவது: வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை சற்று வடக்கு நோக்கி ஆந்திர கடல் பகுதிக்கு சென்றது. தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும். இதுவரையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 3 […]

அடுத்த 2 நாட்களுக்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

மத்திய மேற்கு வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெறும். அரபிக் கடலில் தொடர்ந்து அதே இடத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட […]

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்..!

தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்

நீலகிரியில் வெளுத்துவாங்கும் மழை!நிலச்சரிவால் பாதிப்பு..!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைக்காட்டிலும் கூடுதலாக 30 சதவீதம் பெய்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழையும் மிகத் தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் இடியுடன் கொட்டிய கனமழையால் உதகையில் இருந்து மஞ்சூர் கின்னகொரை வரை நெடுஞ்சாலையில் 54 இடங்களில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். […]

தமிழகத்தில் அக்.,21, 22ல் கனமழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று (அக்., 18) முதல் அக்., 20 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அக்., 21, 22ம் தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதம் கிடைக்க வேண்டிய சராசரி மழை அளவில் 8 சதவீதம் கிடைத்துள்ளது. மீனவர்கள், கேரள […]
Page 1 of 812345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news