News

பிரம்மாண்ட சாதனை செய்த இரும்பு திரை ட்ரைலர். விவரம் உள்ளே

Sunday, May 06, 2018



அறிமுக இயக்குநரான P.S.மித்ரன் இயக்கியிருக்கும் படம் இரும்புத்திரை. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து நடிகர் விஷாலும் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஷால் அர்ஜூன், சமந்தா, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். 

ராஜா ராணி, கத்தி, தெறி போன்ற வெற்றி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜார்ஜ். சி.வில்லியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், ரூபனின் படத்தொகுப்பில், யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் பிப்ரவரி மாதமே திரைக்கு வரும் என்று எதிர்பாக்கப்பட்டது. பட வேலைகள் முடியாமல் இருந்ததாலும், தமிழ்த் திரையுலகினர் நடத்திய ஸ்டிரைக்கினாலும் தாமதமான `இரும்புத்திரை’, வருகிற 11 ம் தேதி ரிலீஸாகவுள்ளது. நவீன உலகில் வளர்ந்து வரும் டெக்னாலஜியால் நமக்கு என்னென்ன பிரச்னைகள் வருகிறது, அதிலிருந்து தப்பிக்க நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லரும் வெளியாகியி நல்ல வரவேர்பை பெற்றுவருகிறது. விரைவாக மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இந்த படத்தின் ட்ரைலரை 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.