Category: Cinema

நந்திதா ஸ்வேதாவின் புதிய அவதாரம்!

பெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ் சினிமாவில் இப்போது அதிகமாக வர துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ், ஹாரர், ஆக்ஷன் என ஹீரோயின்கள் அடித்து ஆடத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் ஐ.பி.சி 376 என்ற ஆக்ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இந்தப் படத்தை சண்டை இயக்குனர் ராம்குமார் சுப்பாராயன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: அட்டக்கத்தி படத்தில் இருந்தே தனது நடிப்பால் தனக்கென ஒரு […]

ஒரே சமயத்தில் ரஜினி – விஜய்

நயன்தாரா போன்றே ஒரே சமயத்தில் ரஜினி மற்றும் விஜய் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் தீபாவளியையொட்டி ரிலீசாகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நயன், ரஜினிக்கு ஜோடியாக தர்பார் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தர்பார் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. ஒரே சமயத்தில் தமிழின் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து […]

டில்லி போலீசில் பிரகாஷ்ராஜ் மீது புகார்!!

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக, நடிகர் பிரகாஷ்ராஜ் மீது டில்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் சேனல் ஒன்றில் நடிகர் பிரகாஷ்ராஜ், ராம்லீலா குறித்து பேசும்போது, அதனை குழந்தை ஆபாசத்துடன் ஒப்பிட்டு பேசியதாகவும் , சிறுபான்மையினர் இடையே அச்சத்தை பரப்புகிறது என கூறியதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக பிரகாஷ்ராஜ் மீது டில்லி திலக் மார்க் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. […]

உல்லாசம்’ ரீமேக்! விக்ரம் பிரபு, துல்கர் சல்மான்

  • October 25, 2019
  • Comments Off
அஜித், விக்ரம் இணைந்து நடித்த ‛உல்லாசம்’ படத்தின் ரீமேக்கில் விக்ரம் பிரபுவும், துல்கர் சல்மானும் சேர்ந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1997ம் ஆண்டு வெளியான படம் உல்லாசம். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள அஜித்தும், விக்ரமும் இப்படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் அமிதாப்பச்சன் தயாரித்த அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அப்படத்தை மீண்டும் ரீமேக் […]

ஆபாச எல்லைக்குள் நுழைய மாட்டேன்- ப்ரியா வாரியர்…

மலையாளத்தில் வெளியான அடார் லவ் படம் பெரிய அளவில் வசூலை அள்ளிக் குவிக்கவில்லை என்றாலும், படத்தில் நடித்த ப்ரியா வாரியருக்கு மிகப் பெரிய அளவில் புகழ் வெளிச்சத்தை கொட்டியது. மாணிக்க மலராய பூவி என, அடார் லவ் படத்தில் வரும் பாடலில், பள்ளி மாணவியாக நடித்திருக்கும் ப்ரியா வாரியர், சக மாணவனுக்கு காதலை மிக அழகாகத் தெரிவிப்பார். தன்னுடைய புருவங்களை வளைத்தும், முக பாவனைகள் மூலமாகவும் காதல் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்த, அது, உலக அளவில் […]

காதலுக்கு முன் கடமை- பிக்பாஸ் கவின்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பதினாரு போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்கள் நடிகர் கவினும், லாஸ்லியாவும். இதில், லாஸ்லியா இறுதிப் போட்டி வரை வந்தார். ஆனால், அவரால் மூன்றாவது இடத்தைத்தான் பெற முடிந்தது. ஆனாலும், மொத்த நிகழ்ச்சியிலும் பேசும் பொருளாக இருந்தது, கவின் – லாஸ்லியா இருவரும் காதலித்ததுதான். நிகழ்ச்சி முடிவதற்குள், இருவரும் தங்கள் காதலை ஓபனாக தெரிவித்து, ஒன்று சேருவர் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், அப்படி நடக்கவில்லை. இருந்தபோதும், நிகழ்ச்சி முடிந்த பின், இருவரும் வெளியே […]

திருப்பதியில் நயன்தாரா!?

நடிகை நயன்தாரா எப்போதுமே பரபரப்புகளுக்கு சொந்தக்காரர். பரபரப்பான கருத்துக்கள் எதையும் கூறமாட்டார். ஆனால் அவரது செய்கைகள் பரபரப்பை கிளப்பும். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு காதலை உறுதிபடுத்திக் கொண்டே இருக்கிறார். இருவரும் வருகிற டிசம்பர், அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்ற செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருப்பதி சென்று சாமி தரிசனம் […]

நடுத்தர வயது பெண்ணாக டாப்சி!

டாப்சிக்கு, பாலிவுட்டில் கிடைத்துள்ள முக்கியத்துவத்தை பார்த்து, சக நடிகையர் வயிற்றெரிச்சலில் உள்ளனர். தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி படங்களில் கவர்ச்சி பொம்மையாக வலம் வந்த டாப்சி, பாலிவுட்டில், இப்போது தவிர்க்க முடியாத நடிகை. இவர் நடித்த, சான்ட் கி ஆங்க் என்ற ஹிந்தி படம், இன்று வெளியாகிறது. இதில், 50 வயதை கடந்த பெண்ணாக நடித்துள்ளார், அவர். நடுத்தர வயதுடைய இரு பெண்கள், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் சாதிப்பதே, இந்த படத்தின் கதை. இது குறித்து டாப்சி […]

விஜய் ரசிகர்கள் காலித்தனம்!!

விஜய் நடித்த பிகில் படம் இன்று (அக்.,25) ரிலீசானது. இப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு கடைசி நிமிடத்தில், அனுமதி அளித்தது. இரவு 10 மணிக்கு மேல் தமிழக அரசு பிகில் சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளித்ததால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 650 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சிறப்புக்காட்சி திரையிடப்பட்டதால், நள்ளிரவு முதலே தியேட்டர் வாசலில் விஜய் ரசிகர்கள் கூச்சலிட்டு வந்தனர். சில தியேட்டர்களில் ஒரு மணி நேரம் தாமதமாக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. […]
Inandoutcinema Scrolling cinema news