Category: Cinema

காடன் படத்தின் மேக்கிங் வீடியோ… வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்திய ராணா!

தொடரி படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் அடுத்ததாக நடிகர் ராணா டக்குபதியை வைத்து காடன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான உருவாகியிருக்கும் இப்படம் ஒரு யானை பாகனின் வாழ்வை மையமாக […]

தெலுங்கு ரசிகர்களை கவரும் சிவகார்த்திகேயன்…

ஆந்திரா, தெலுங்கானாவில் தமிழ் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. தெலுங்கு நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவிக்கின்றன. இதனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் தெலுங்கு மொழியிலும் வெளியிடுகிறார்கள்.தற்போது சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தையும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். இந்த படத்தை இரும்புத்திரை படத்தை எடுத்து பிரபலமான மித்ரன் இயக்கினார். நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் அர்ஜுன், இந்தி நடிகர் அபய் தியோல், இவானா ஆகியோரும் […]

ஹர்பஜன் சிங்குடன் மோதும் ஆக்‌ஷன் கிங்

கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார். சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.அடுத்ததாக ஹர்பஜன் சிங் ‘பிரண்ட்ஷிப்’  என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா இப்படத்தில் கதாநாயகியாக […]

சிம்புவின் அடுத்த படத்தில் வில்லனாகும் பிரபல ஹீரோ

சிம்புவின் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்க உள்ள ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் தொடங்க உள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ’மஹா’ படத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று சற்றுமுன் வெளிவந்துள்ளது ஹன்சிகாவின் 50வது திரைப்படமான ’மஹா’ படத்தில் சிம்பு முதலில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகதான் இருந்தது. ஆனால் இந்த கதையால் இம்ப்ரஸ் ஆன சிம்பு, தனது கேரக்டரை விரிவுபடுத்தும்படியும் அதற்குத்தான் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் கூறியதை அடுத்து அவரது கேரக்டர் விரிவுபடுத்தப்பட்டது விமான பைலட்டாக இந்த படத்தில் […]

நோ டைம் டூ டை ; வெளியானது புதிய ஜேம்ஸ் பாண்ட் பட டீசர்

ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரை சாகாவரம் பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் முக்கியமானவர் ஜேம்ஸ்பாண்ட். அதனாலேயே கிட்டத்தட்ட மூன்று வருட கால இடைவெளிகளில் தொடர்ந்து வெளியாகும் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு என உலகம் முழுவதும் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. அந்தவகையில் கடந்த 2015 வெளியான ஸ்பெக்ட்ரே படத்தை தொடர்ந்து தற்போது ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் அடுத்ததாக ‘நோ டைம் டு டை’ என்கிற படம் உருவாகியுள்ளது. இதற்கு முந்தைய நான்கு படங்களிலும் ஜேம்ஸ்பாண்ட் ஆக தொடர்ந்து நடித்து […]

அயலான் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மத்தியில் பெரிதாக பேசப்படும் நடிகர் சிவகார்திகேயன் இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். எஸ்கே பிறந்தநாள் ஸ்பெஷலாக நெல்சன் இயக்கத்தில் அவரை நடித்து வரும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியது.  அதையடுத்து மீண்டும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என கூறி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் சற்றுமுன் தங்களது ட்விட்டர் பக்கத்தில், சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று […]

நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை- சென்னை ஐகோர்ட்டு

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு, ஜூன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது எனவும் […]

குட்டி கத பாடலை டிக் டாக் செய்த அனிருத் !

தளபதி விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இன்னும் கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே மீதம் இருப்பதாகவும் இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என படக்குழுவினர்களிடமிருந்து தகவல் வெளிவந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். கல்லூரி பேராசிரியாக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவரது மாணவராக சாந்தனு நடித்துள்ளார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு […]
Page 4 of 428« First...«23456 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news