Category: Cinema

இனிதே தொடங்கிய மாநாடு படப்பிடிப்பு! !

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ இந்தப் படத்துக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், எடிட்டராக பிரவீன் கே.எல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படத்தின் டைட்டில் போஸ்டர் கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியானது. மே மாதம் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் முதற்கட்ட […]

தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல – ஏ.ஆர்.ரஹ்மான்

மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக்கும் அம்சம் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் தற்போது புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் என்பதற்கு பதிலாக மூன்றாவது மொழியாக இந்திக்குப் பதில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் மொழியை தேர்வு செய்துகொள்ளலாம் என வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பதிவில், மத்திய அரசின் முடிவு அழகிய தீர்வு என்று பதிவிட்டுள்ளார்.

மகாத்மா மனிதர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜி வி பிரகாஷ்

இசையமைப்பாளராக அறிமுக ஆன ஜீ வி ஹீரோவாகி இப்போது தொடர்ச்சியாக படங்கள் நடித்துக்கொண்டிருக்கிறார். தன்னை ஒரு நடிகனாக மட்டுமல்லாது சமூக சேவகனாக தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார்.  இவர் தற்போது மகாத்மா மனிதர்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “இது ஒரே இரவில் எடுக்கப்பட்ட அவசர முடிவு அல்ல, மிக நீண்ட காலமாக எனக்குள் மிகவும் ஆழமாக இருந்த ஒரு விஷயம். நமது சினிமா துறையில் இருந்து பலர், இத்தகைய பிரமுகர்களை […]

புதுமுகங்கள் நடிக்கும் “காதலும் மோதலும் “

புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்குகிறார்.அறிமுக கதாநாயகனாக அமுதன் , சுமாபூஜாரி ,அங்கணா,தீர்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தினை யூனிக் சினி கிரேஷன் சார்பில்  ரவ்னக் தயாரிக்கிறார். இப்படத்திற்கு மோகன்குமார் ஒளிப்பதிவு செய்ய ஜஸ்டின் பிரொன்டோஸ் படத்தொகுப்பு மேற்கொள்ள கிறிஸ்டி இசையமக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயற்சியாளராக டேன்ஜர் மணி மற்றும் நடன இயக்குனராக ரமேஷ் பணியாற்றுகிறார். இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்குகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பேரரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் […]

நான் அவன் இல்லை ஜீவா நடிக்கும்-அசரீரி

அறிவியல் புனைவு திரைப்படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து விடும். அதற்கு காரணம் வெறுமனே அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமல்ல, அதில் பிணைந்திருக்கும் உணர்ச்சி கூறுகளும் தான். அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் அசரீரி படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராண குறிப்புகளை கூட தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை […]
Page 39 of 268« First...102030«3738394041 » 506070...Last »
Inandoutcinema Scrolling cinema news