Category: Cinema

அமலாபாலின் ‘பொய்யாட்டம்’…

கிருஷ்ணா இயக்கத்தில், சுதீப் – அமலா பால் ஜோடியாக நடித்த, ஹூப்ளி என்ற கன்னட படம், தமிழில், பொய்யாட்டம் என்ற பெயரில் வெளியாகிறது.தமிழில் வெளியிடும், செந்தில் ஆனந்த் இது குறித்து கூறுகையில், ”மருந்து தயாரிப்பில் நடக்கும் முறைகேடுகளை வெளிப்படுத்தும் படம் இது. ஆடை படம் போலவே, இதிலும் அமலாபாலின் நடிப்பு பேசப்படும்,” என்றார்.

பட அதிபரை பீர்பாட்டிலால் தாக்கிய நடிகை!?

தமிழில் ‘ஒரு காதல் செய்வீர்’ படத்தில் அறிமுகமானவர் சஞ்சனா கல்ராணி. தற்போது மேலும் 2 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். பெங்களூருவில் வசிக்கிறார். இவர் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். சஞ்சனா கல்ராணி பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றுக்கு சென்று இருந்தார். அதே நிகழ்ச்சிக்கு இந்தி பட தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் என்பவரும் வந்து இருந்தார். நடிகர், நடிகைகளும் […]

ரஜினியின் ‘தர்பார்’ ரிலீஸ் – தேதி…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் தர்பார். நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகிபாபு என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜனவரி 9-ந் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், ஒரு நாள் முன்னதாக அதாவது ஜனவரி 8-ந்தேதியே அமெரிக்காவில் பிரிமியர் காட்சி திரையிடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்களை விட அமெரிக்காவில் உள்ள ரசிகர்கள் ஒருநாளைக்கு முன்னதாகவே தர்பார் படத்தை பார்த்து […]

நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்திபன் படத்தில் வடிவேலு?

சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் கசிந்தது. இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல் பங்கேற்று வருவதால் தலைவன் இருக்கின்றான் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. வெப் தொடர்களில் நடிக்க வடிவேலுக்கு அழைப்புகள் வருகின்றன. அவரும் வெப் தொடரில் நடிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பார்த்திபன் நடித்து இயக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் […]

கூத்தாடி என்று விமர்சித்தவருக்கு – டுவிட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு..

குடியுரிமை சட்டத்தை நடிகை குஷ்பு கடுமையாக எதிர்த்தார். அவர் கூறும்போது, “குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவை சிதைக்க கூடியது. அதிகாரம் படைத்தவர்களால் தேசத்தின் எதிர்காலம் சிதைவதை பொறுக்க முடியாது. மோடியும் அமித்ஷாவும் நாட்டின் அமைதிக்கு கேடு செய்கின்றனர். நாடு மத சார்பின்மையால் இயங்குகிறதே தவிர மதத்தினால் அல்ல” என்றார். குஷ்பு கருத்துக்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறும்போது, “இந்தியர்களுக்கு குடியுரிமை பறிக்கப்படுவதுபோல பேசி இருக்கிறார். அந்த பொய்யை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் குடியுரிமை திருத்த […]

ரகசியம் சொன்ன பிரபாஸ் நடிகை…

கேடி படத்தில் தமிழுக்கு வந்த தமன்னாவிற்கு விஷாலுடன் நடித்த ஆக்சன் படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லை. ஆனபோதும் தெலுங்கு, ஹிந்தியில் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார். தனது உடம்பை கட்டுக்கோப்பாக பராமரித்து வரும் தமன்னா, தான் அளித்த ஒரு பேட்டியில் அதன் ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அதில், தினமும் அதிகாலை எழுந்தவுடன் வெந்நீரில் எலுமிச்சை சாறுடன் தேனை கலந்து குடிப்பாராம். அதன்பிறகு ஊற வைத்த சிறிதளவு பாதாம்களை உண்பாராம். அதையடுத்து இட்லி, தோசை, ஓட்ஸ் ஆகியவற்றில் ஒன்று […]

சிரஞ்சீவியின் ஸ்டைலிஷ் லுக்

சைரா நரசிம்ம ரெட்டி படத்தை அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் 152வது படத்தை கொரட்டல்ல சிவா இயக்குகிறார். இது சிரஞ்சீவியுடன் அவர் இணையும் ஐந்தாவது படமாகும். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த ஸ்டாலின் படத்தில் நாயகியாக நடித்த திரிஷா, அதையடுத்து இந்த படத்திலும் சிரஞ்சீவியுடன் டூயட் பாடுகிறார். மணிசர்மா இசையமைக்கிறார். இப்படத்தில் சிரஞ்சீவியை வித்தியாசமான கெட்டப்பில் காண்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே இரண்டு முறை போட்டோ ஷூட் நடத்திய கொரட்டல்ல சிவாவிற்கு திருப்தி ஏற்படவில்லையாம். அதனால் மீண்டும் சிரஞ்சீவியை […]

அடுத்தாண்டு பிரபாஸ் திருமணம்

பிரபாசும், அனுஷ்காவும் திருமணம் செய்ய இருப்பதாக வெகு காலமாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இருவரும் மறுத்து வருவதோடு, நாங்கள் நண்பர்கள் மட்டுமே என கூறி வருகின்றனர். அதேசமயம் பிரபாஸிற்கு பெண் தேடும் படலமும் ஒரு புறம் அவர்களது வீட்டார் சார்பில் நடக்கின்றன. இந்நிலையில் பிரபாஸின் திருமணம் குறித்து, அவரது அத்தை ஷியாமளாதேவி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ‛ஜான்’ படம் முடிந்ததும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என பிரபாஸ் எங்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். […]

விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்

விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது எப்.ஐ.ஆர். என்ற படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குனரான கவுதம் மேனன் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சுஜாதா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்கிறார். கிருமி பட புகழ் […]

பட்டைய கிளப்பும் “பட்டாஸ்” படத்தின் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “பட்டாஸ்” படம் அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல்கள் மூலம் கொண்டாட்ட அதிர்வலைகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சிங்கிளான “ஜில் ப்ரோ” மற்றும் இரண்டாவதாக வெளியான “மொரட்டு தமிழன்டா” இரண்டும் பெரு வெற்றி பெற்ற நிலையில் இப்போது மூன்றாவதாக அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்  ஒரே இரவில்  ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களை கவர்ந்திழுத்து பெரு வெற்றியடைந்துள்ளது.  “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது […]
Page 37 of 430« First...102030«3536373839 » 405060...Last »
Inandoutcinema Scrolling cinema news