Category: Cinema

பாதுகாவலைரைக் கன்னத்தில் அறைந்த சல்மான் கான்! அதிர்ச்சியில் ரசிகர்கள்?

நேற்று ரமலானை முன்னிட்டு தனது நடிப்பில் வெளியான பாரத் படத்தைப் பார்த்துவிட்டு சல்மான்கான் திரையரங்கில் இருந்து வெளியேறினார். அப்போது ரசிகர்கள் கூட்டத்தில் சல்மானைப் பாதுகாக்கும் பாதுகாவலர்கள் அவருக்கு வழி ஏற்படுத்தியபடியே சென்றனர். திடீரென திரும்பிய சல்மான் கான் தனது பாதுகாவலரைக் கன்னத்தில் அறைந்தார். இதனிடையே கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் போது சிறுமி என்றும் பாராமல் பாதுகாவலர் தள்ளிவிட்டதை சல்மான் கான் கண்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்து தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

நாளை முதல் விஜய் அண்டோனின் கொலைகாரன்!

பாப்டா நிறுவனம் மூலம் தனஞ்ஜெயன் வெளியிடும் திரைப்படம் ”கொலைகாரன்“. இப்படத்தில் விஜய் அண்டோனிக்கு ஜோடியாக அஷிமா தமிழில் அறிமுகம் ஆகிறார். நாளை வெளியாக உள்ள இப்படத்திற்கு ப்ரோமோஷன் பணிகள் துவங்கியுள்ளன. தெலுங்கிலும் இப்படம் வெளியாகவுள்ளது. ‪கொலைகாரன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது.  இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது விஜய் அண்டோனி மற்றும் நடிகை அஷிமா மேடையில் கொலைகாரன்“ படத்தில் இடம்பெறும் மெலடி பாடலுக்கு ஏற்றார் போல் நடனமாடினர்.

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணி!!?

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்தச் சங்கத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில், தலைவர் பதவிக்கு நாசரும், பொது செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். துணை தலைவர்கள் பதவிக்கு பூச்சிமுருகன், கருணாஸ் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஸ்ரீமன், பசுபதி, […]

ரசிகர்களின் செயலால் அதிர்ச்சி அடைந்த தர்பார் படக்குழு

தர்பார் ரஜினி காந்த் நடிக்கும் 166வது படம். இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘தர்பார்’ படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. தற்போது, இப்படபிடிப்பிடில் இருந்து ஒரு காட்சி லீக்காகி வைரலாகி வருகிறது. போலீஸ் வாகனத்தில் இருந்து ரஜினி இறங்கி நடந்து வரும் காட்சி வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும், […]

நடிகர் சல்மான்கானின் பாரத் திரைப்படம்!!

நடிகர் சல்மான்கான் நடித்துள்ள பாரத் திரைப்படம் இன்று வெளியாகிறது. இதையொட்டி மும்பையில் நடைபெற்ற அறிமுக விழாவில், சல்மான் கான், கத்ரினா கைஃப், தபு, கரிஷ்மா கபூர், நேஹா துபியா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர். தாதா சாகிப் பால்கே  விருது பெற்ற மூத்த நடிகரும் இயக்குனருமான மனோஜ்குமார், தனது சொந்தப் படங்களில் எல்லாம் தனது கதாபாத்திரத்திற்கு பாரத் என்று பெயரிட்டார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இப்படத்திற்கு பாரத் என்ற பெயர் வைத்திருப்பதாக சல்மான் கான் […]

‘தளபதி 63’ அப்டேட்?ஏ.ஆர். ரஹ்மான்…

‘தளபதி 63’ படத்தை இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தில் அட்லியும் விஜய்யும் இணைந்து பணிபுரிவதன் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று இரவு பதிவு செய்த ஒரு ட்விட்டில் ‘தளபதி 63’ படத்தின் இரண்டு பாடல்களின் எடிட்டிங் பணி முடிந்துவிட்டதாகவும், இந்த இரண்டு பாடல்களையும் முதல்முதலில் பார்த்தது நான் தான் என்ற பெருமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் இப்படத்தின் இயக்குனர் அட்லியும் உடன் இருக்கிறார் […]

அடுத்த ரவுண்டு வரும் வடிவேலு!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக உச்சம் தொட்டவர் வடிவேலு. 24ஆம் புலிகேசி படத்தை எடுக்கத் தொடங்கினர். ஆனால் சில நாட்களில் இயக்குநர் சிம்புதேவனிற்கும், வடிவேலுவிற்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. ‘Nesamani’ என்ற ஹேஸ்டேக் திடீரென வைரலானது. இது வடிவேலுவை பற்றி மீண்டும் பேச வைத்தது. இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு வடிவேலு பேட்டியளித்தார். அதில், தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுத்தால் என்ன? அதான் உலகளாவிய சினிமா […]
Page 35 of 265« First...102030«3334353637 » 405060...Last »
Inandoutcinema Scrolling cinema news