Category: Cinema

“பூஜையுடன் துவங்கிய சிம்புவின் மாநாடு! உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்!

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ‘மாநாடு’ என்ற திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வழக்கம்போல் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு தர சிம்பு அடம்பிடித்ததால் இந்த படம் கிட்டத்தட்ட டிராப் ஆனதாக செய்திகள் வெளிவந்தது.   இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து சிம்புவின் தாயார் கொடுத்த உறுதி மொழியை ஏற்று ‘மாநாடு’ படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்தார். பின்னர் […]

‘திரெளபதி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு…

சமீபத்தில் ‘திரெளபதி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே சர்ச்சைக்கும் பஞ்சமில்லாத இந்த படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இயக்குனர் ஜி.,மோகன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். திரெளபதி’ படத்தின் தணிக்கைப் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், இதனை தொடர்ந்து விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டதாகவும் தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ரிச்சர்ட், […]

அஜித்துக்கு மீண்டும் காயம்: பரபரப்பில் வலிமை படக்குழு

தல அஜித் படப்பிடிப்பின் போது பலமுறை காயமுற்றுள்ளார் என்பதும் அவருக்கு ஏற்கனவே பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது  இந்த படப்பிடிப்பில் பைக் சேஸிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அப்போது நிலைதடுமாறிய அஜித் கீழே விழுந்ததால் தோள்பட்டை மற்றும் காலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த காயத்தால் பெரிய பாதிப்பு எதுவும் […]

வெயிட் குறைக்கும் சேதுபதி… காரணம் இதோ!

சராசரி வெயிட்டுடன் இருந்த விஜய்சேதுபதி சமீபத்தில் வெளிவந்த சங்கத்தமிழன் உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்களில் கூடுதல் வெயிட் போட்டிருந்ததுபோல் தோற்றம் அளித்தார். தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருந்தார். கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். அதேகூட்டணி விரைவில் இணைகிறது. கூடுதலாக சமந்தாவும் இணைந்து நடிக்கவிருக்கிறார். இப்படத்துக்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ‘2 வருடத்துக்கு முன்பு இப்படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியானது. அதனை கேட்ட […]

வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் “அயலான்” ஃபர்ஸ்ட் லுக் !

“அயலான்” பெயர் வெளியாவதற்கு முன்பு, இப்படம் ஆரம்பித்த தருணத்திலிருந்தே பலரது புருவத்தை உயர்த்தி, எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்த படமாக மாறியிருக்கிறது.  தமிழில் அறிவியல்புனைவு கதைகள் என்பது முயற்சிக்கபடாத அரிய  கனவு. ஹாலிவுட்டின்  வெற்றி சரித்தரமாக விளங்கும்   இந்த அறிவியல் புனைவு வகை படத்தை பிரமாண்டமாக தமிழில் தர தயாராகியுள்ளது “அயாலான்” குழு. சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் சிறப்பாக 17.02.2020 அன்று  “டாக்டர்” படக்குழு தங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் முன், […]

“பொம்மை” படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது

காற்றின் மொழி படத்திற்கு பிறகு ராதாமோகன் இயக்கும் படம் பொம்மை. எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் இசை அமைக்கிறார், ரிச்சர் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்கப்பட்டு விட்டது. ஒரே ஷெட்யூலில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார் ராதாமோன். தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் தொடங்கி உள்ளது. விரைவில் இதன் பாடல் வெளியீட்டு விழாவை பெரிய அளவில் நடத்த […]

பாரதி ராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை பட புதிய ஸ்னீக் பீக் காட்சி!

பாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள “மீண்டும் ஒரு மரியாதை” என்ற படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். வயதான முதியவர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான கதையான இப்படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு முதலில் […]
Page 3 of 428«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news