Category: Cinema

ஐரா – இரட்டை வேடத்தில் நயந்தாரா

நயந்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் ஐரா. KJR பிலிம்ஸ் சார்ப்பில் இயக்குநர் சர்ஜூன் இயக்குகிறார். சர்ஜூன் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் இயக்குநர். ஐரா படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டீசரை பார்க்கும் பொழுது கிராமத்து பெண்ணாகவும், நகரத்து பெண்ணாகவும் இரண்டு தோற்றங்களில் நயந்தார இருக்கிறார். கண்டிப்பாக இது இரட்டை வேடம் தான் என்பது போல் தெரிகிறது. படத்தின் டீசரின் காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டும் தொனியில் இருக்கிறது. இந்த படத்தின் ரிலீசை […]

இயேசு என்ன சொல்கிறார்? லவ் பண்ண சொல்கிறார் – மிரட்டும் மெஹந்தி சர்க்கஸ் டீஸர்

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மெஹந்தி சர்க்கஸ். இந்த படத்தை ராஜு முருகன் இயக்குகிறார். தனக்கென ஒரு ஸ்டைலை கொண்டு தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கவர்ந்த இயக்குனர். அவரது படைப்பில் குக்கூ அனைவரின் மனதையும் கவர்ந்து சென்றது. அதே வரிசையில் மெஹந்தி சர்க்கஸ் படமும் நிற்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

பாலிவுட்டில் கால் பதிக்கும், வீரப்பன் கதையில் நடித்த பிரபல நடிகை

கொல கொலயா முந்திரிக்கா, விண்மீன்கள், வனயுத்தம் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பாவனா ராவ். இதில் வனயுத்தம் திரைப்படம் வீரப்பன் வாழ்க்கையை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டது. இவர் கன்னட படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் வெளியான சத்ய ஹரிஷ்சந்திரா என்ற கன்னட படத்தில் சிறப்பாக நடித்தற்காக விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது சிவராஜ்குமார், சுதீப், எமி ஜாக்சன் நடிப்பில் தயாராகும் த வில்லன் என்ற படத்திலும் […]

12 வருட ஆசை தற்போது நிறைவேறி இருக்கிறது – கங்கனா ரனாவத்

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் மணிகர்னிகா – ஜான்சியின் ராணி. ராதாகிருஷ்ணா, ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணிகர்ணிகாவாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வரும் ஜனவரி 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. […]

IMAX தியேட்டரில் மனைவியுடன் படம் பார்த்த நம்ம கேப்டன் – வைரல் ஆகும் புகைப்படம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தைராயிடு, கிட்னி சம்பந்தமான பிரச்னைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று அவருகிறார். இதனால் அவர் கட்சி பணிகளில் முழுநேரம் ஈடுபட முடியாமல் உள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 2ம் கட்ட சிகிச்சைக்காக விஜயகாந்த், மனைவி பிரேம லதாவுடன் அமேரிக்கா சென்றார். உடனே அவரது உடல் நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால், அவர் அமேரிக்காவில் இருந்தே தமிழ்க விவசாயிகள் பிரச்னை, இடைநிலை ஆசிரியர்கள் பிரச்னைகளுக்கு குரல் […]

தடுமாற்றத்தில் ஆஸ்திரேலிய அணி – கலக்கிய குலதீப் யாதவ்

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டி தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் 2ல் இந்தியாவும், 1ல் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளது. அதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி, சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த் இந்தியா 622 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இந்திய அணியின் வீரர் ரிஷாப் பன்ட் 159 எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் உள்ளார். […]

அஜித் சாரின் மாஸ் அவதாரத்தை தாண்டி சில விஷயங்கள் படத்துல இருக்கு – மிலன்

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதன் தமிழக விநியோக உரிமையை […]
Inandoutcinema Scrolling cinema news