Category: Cinema

Mr.Majnu Single Track Released | Watch here

நாகர்ஜுனா மகன் அகில் நடிக்கும் MR.மஜ்னு படத்தின் பாடல் ஒன்று  வெளியாகியுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே அதிகமாக அனைவராலும் கேட்கப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. அகில் அகினேனி கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் இதுவாகும்.  தோழி பிரேமா என்ற வெற்றி படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி இந்த படத்தை இயக்கி வருகிறார்.  தமனின் இசையில் வெளிவந்துள்ள  “ஏமனாயுடு” பாடல் இசை பிரியர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

மீண்டும் சாட்டையை கையில் எடுக்கும் சமுத்திரக்கனி

இயக்குநர் M.அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் சாட்டை. சாட்டை ஒரு படமாக மட்டும் அல்லாமல் பள்ளியில் கற்பிக்கும் முறை பற்றியும், பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் முறை பற்றியும் எடுத்துக் கூறி அனைவருக்கும் சாட்டை அடி கொடுத்தது. இந்நிலையில் இயக்குநர் அன்பழகன் மீண்டும் சாட்டையை எடுத்து சமுத்திரக்கனியின் கையில் கொடுத்துள்ளார். சாட்டை படத்தின் கருத்துக்கள் ரசிகர்களுக்கு பாடம் கற்றுகொடுத்த பின்னரும் மீண்டும் இந்த கூட்டணி இணைந்து எடுக்கும் “அடுத்த சாட்டை”  […]

ஹிப் ஹாப் தமிழன் ஆதிக்கு குவியும் பாராட்டுக்கள் – விவரம் உள்ளே

ஹிப்ஹாப் தமிழா என்கிற ஆதி ஆம்பள படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். திரைத்துறைக்கு வரும் முன்னர் இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர்கள் இந்தியாவில் தமிழ் சொல்லிசையின் [hip hop] முன்னோடி இசைக்குழுக்களில் ஒன்றாக கருதப்படுகிறார்கள். இவர் நமக்கு யூ டியூப் வாயிலாக அறிமுகமாகி பின்னர் பாடகர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என படிபடியாக வளர்ந்தவர். இவர் நடிப்பில் நட்பே துணை என்ற அடுத்த பாடல் வெளியாக உள்ளது. படம் , பாடல்களை […]

பயம் கலந்த சந்தோசத்தில் இருக்கிறேன் என கூறிய நடிகர் விஜய் சேதுபதி

பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இது விஜய் சேதுபதியின் 25வது படம். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மிக பிரமாண்டமாக வெளியிடும் இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் நடிகைகள் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், நடிகர் வெற்றி […]

ஒரு இயக்குநர் தன் அடையாளத்தை இழந்துடாம படத்தை இயக்கனும் – வசந்த பாலன்

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை படமாக எடுப்பவர், இயக்குநர் வசந்தபாலன் ஆகும். சிலகால இடைவெளிக்குப் பிறகு நடிகரும் இசையமைப்பாளரான ஜி.வியை வைத்து ஜெயில் படத்தை இயக்கியிருக்கும் வசந்தபாலன் இன்றைய திரைத்துறையை பற்றி சமீபத்திய பெட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : இன்னைக்கு சினிமா ரொம்ப மோசமான சூழல்ல இருக்கு. நடிகர்கள் தயாரிப்பாளரா மாறணும், இல்லைனா இயக்குநர்கள் தயாரிப்பாளரா மாறணும்ங்கிற நிலை. ஆன்லைன்ல உடனுக்குடன் படங்கள் திருட்டுத்தனமா வந்துடுது. தியேட்டர்ல மூணு நாள்தான் படம் ஓடுது. பரியேறும் […]

ரங்கராஜ் பாண்டே ரஜினி கட்சியில் இணைகிறாரா ? – ரஜினியின் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பேட்ட படத்தின் படப்பிடிப்புகள் அணைத்தும் முடிந்து விட்டதால் அடுத்தகட்ட பணிகளை படக்குழு மேற்கொண்டுள்ளது. இன்னிலையில் ஒய்வு நேரத்தில் இருந்த ரஜினி பத்திரிக்கையாளர்களை […]

கோர்ட்டுக்கு செல்லும் ஹன்சிகா பட போஸ்டர்!

சென்னை: திரைத்துறைக்கு குழந்தை நட்சத்திரமாக ஆறிமுகமானவர் நடிகை ஹன்சிகா இவர் தமிழ், இந்தி, தெலுங்கு என்று 49 படங்கள் வரை நடித்துள்ளார். இவரின் 50வது படத்தை அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் என்பவர் இயக்குகிறார். படத்துக்கு மகா என்று பெயரிட்டுள்ளனர். எக்சட்ரா எண்டர்டெயின்மெட் நிறுவமன் சாபில் மதியழகன் தயாரிக்கிறார். திரில்லர் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில், நடிகை ஹனிசிகா காவி உடையில் கஞ்சா புகைப்பது போன்று இடம் […]
Inandoutcinema Scrolling cinema news