Category: Cinema

ஹவுஸ் ஓனர் பற்றி நடிகர் கிஷோர்

நடிகர் கிஷோர் அவர்களிடம் ஏதோ ஒரு சிறப்பு வாய்ந்த சக்தி உள்ளது. ஒவ்வொரு முறையும், அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார். பன்முகப்பட்ட கதாப்பாத்திரங்களிலும் மிக இயல்பாக நடித்து நம் பாராட்டுக்களை பெறுகிறார். அது ஒரு நேர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் அல்லது வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அவர் ஒருபோதும் தன் மீது கவனத்தை திருப்புவதை தவறவிடமாட்டார். வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் “ஹவுஸ் ஓனர்” படத்தில் தனது புதிய அவதாரத்தின் […]

‘தவிக்கும் சென்னை’ டைட்டானிக் பட நாயகனின் பதிவு !!

டைட்டானிக் திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் நடிகர் லியொனார்டோ டிகாப்ரியோ. இவர் பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் இவர், சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் பற்றாக்குறை குறித்து பிபிசி செய்தி இணையதளத்தில் வெளியாகி உள்ள செய்தியை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தற்போதைய சென்னையின் பிரச்சனையை மழையால் மட்டுமே தீர்க்க முடியும். தண்ணீர் இல்லாத நகரில் முழுமையாக வற்றிப்போன கிணறு என்ற தலைப்பில் செய்தி […]

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாவில் விவேக் பிரசன்னாவின் ‘சர்ப்ரைஸ்’ அவதாரம்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் கிடைத்த  பாராட்டுக்கள் மற்றும் நேர்மறையான வரவேற்பு ஒட்டுமொத்த குழுவையும் மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒவ்வொரு யூடியூபர் (அ) கலைஞர்களும் தங்களது திரை இருப்பு மூலம் கைதட்டல்களையும் பாராட்டுகளையும் கொண்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் ஒரு ஆச்சரியமான ஷோஸ்டாப்பராக மாறியிருக்கிறது. அவர் வேறு யாருமல்ல நடிகர் விவேக் பிரசன்னா. மிகக்குறுகிய காலத்தில் நகைச்சுவை, வில்லத்தனம் மற்றும் குணச்சித்திர வேடம் என தனது பன்முக கதாபாத்திரங்கள் மூலம் […]

‘லயன் கிங்’ தமிழ் படத்தில் நடிகர் சித்தார்த்!?

2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அதன் முந்தைய பதிப்பானது அதன் வலுவான மற்றும் உணர்ச்சி ரீதியான கதை சொல்லல் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்றது. அது எல்லா இடங்களிலும் ரசிகர்களின் இதயங்களை வென்றது.  […]

சைரா நரசிம்மஹ ரெட்டி படத்தின் பணி நிறைவு: ரத்னவேலு அறிவிப்பு

தெலுங்கில், சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு இந்தியளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வரும் ரத்னவேலு, தனது ட்விட்டர் பக்கதில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டன. படத்திற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். இந்த படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். […]

சென்னையை நேசிக்கும் பிரபல பாலிவுட் நடிகை !!

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் கடந்த வருடம்தான் தன்னுடைய காதலனான ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்டார். இதனை அடுத்து ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். ரன்வீர் சிங் நடிக்கும் 83 படத்திலும் ஒரு சிறிய கௌரவ தோற்றத்தில் நடிக்கிறாராம். இந்நிலையில் சென்னையில் டிஷாட் வாட்ச் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்தார் தீபிகா. அவரை காண பல ரசிகர்கள் அந்த மாலில் சூழ்ந்திருந்தனர். அப்போது பேசியவர்,  “நான் […]
Page 21 of 269« First...10«1920212223 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news