Category: Cinema

ஏ.ஆர்.முருகதாஸின் வெப் தொடரில் நடிக்கும் வாணி போஜன்..

தொலைக்காட்சி மூலம் வரவேற்பு பெற்ற வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். நடிப்புக்காக ஏர் ஹோஸ்டஸ் வேலையை உதறிவிட்டு வந்தவர். ‘ஓ மை கடவுளே’ படத்தில் அவருடைய கேரக்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. தற்போது அவர் கைவசம் 5 படங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, அவர் ஒரு வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இந்த வெப்தொடரை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். இந்த வெப் தொடரை ஏ.ஆர்.முருகதாஸின் […]

ஷில்பா ஷெட்டியின் ‘வாத்தி கம்மிங் ஒத்து’ வெர்ஸன்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் “மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் […]

இணையத்தில் செம வைரலாகும் நடிகர் விஜய்யின் கல்லூரி குரூப் போட்டோ!

தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான தளபதி விஜய் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆரம்பம் காலத்தில் இருந்தே படி படியாக தனது அயராது உழைப்பாலும் விடா முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக வளர்ந்து நிற்கிறார். இன்று இவரை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது  செய்தியாக பேசப்படும் அளவிற்கு அவர் உச்ச நடிகராக விளங்கி வருகிறார். இந்நிலையில் […]

டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம்?

கொரோனாவால் பட உலகம் முடங்கி உள்ளது. இந்த பிரச்சினை ஓய்ந்து திரையரங்குகளை மீண்டும் திறக்க சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதன்பிறகும் திரையரங்குகளில் சமூக விலகலை கடைப்பிடிக்க ஒரு இருக்கையை காலியாக விட்டு பாதி டிக்கெட்டுகள் மட்டுமே விற்க ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுபட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை இணையதளத்தில் ரிலீஸ் செய்யும் முடிவுக்கு மாறி வருகிறார்கள். ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படம் இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இதுபோல் மேலும் 5 படங்கள் […]

தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்!

தெலுங்கில் பவண் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்தி மற்றும் தமிழில் உருவான பிங்க் படத்தின் தெலுங்கு பதிப்பில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யான் நடிக்க இருக்கிறார். அரசியலுக்காக சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பவன் மீண்டும் படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழில் தயாரித்த போனி கபூரே வேறு ஒரு முக்கிய தயாரிப்பாளரோடு இணைந்து இந்த படத்தையும் […]

வீட்டில் இருந்தபடியே பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர். 8 வருட    காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து […]

பிரபாஸுக்கு வாரிசு நடிகையுடன் திருமணமா?

பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவருமே மறுத்து நட்பாகத்தான் பழகுகிறோம் என்று தெளிவுபடுத்தினர். தற்போது கொரோனா ஊரடங்கில் பிரபாஸ் திருமணம் பற்றி இன்னொரு தகவல் பரவி உள்ளது. அதாவது நடிகை நிஹாரிகாவை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. நிஹாரிகா, நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் ஆவார். தமிழில் விஜய் சேதுபதி, […]

டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறதா சர்வம் சுந்தரம்…??

தமிழ் திரையுலகில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசானில் வெளியாக உள்ளதாகவும், தயாரிப்பு செலவை விட இருமடங்கு அதிக லாபத்திற்கு படத்தை விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படி ரிலீஸ் செய்தால் சூர்யாவின் எந்த படத்தையும் தியேட்டரில் வெளியிடமாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இந்தியில் இயக்கிய லக்‌ஷ்மி பாம் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுமுயற்சியாக […]

கொரோனா குறித்து நடிகர் வெளியிட்டு வீடியோ!

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளனர். இதற்கிடையில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கடந்த சில நாடகளாகவே விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். உலகமக்கள் […]
Page 20 of 487« First...10«1819202122 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news