Category: Cinema

கர்ணன் படத்துக்கு தடைக்கோரி மனு..

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தென் தமிழகத்தின் சாதிய பாகுபாடுகளை வெளிக்காட்டியதாக பாராட்டப்பட்டவர் மாரி செல்வராஜ். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பணிகள் நெல்லையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படையினர் அமைப்பு நெல்லை மாநகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் ”1991ம் ஆண்டில் நடந்த கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்திற்கு […]

சிக்ஸ்பேக்கில் மிரட்டும் ஆர்யா.. என்ன படம் தெரியுமா?

நடிகர் ஆர்யாவின் அதிரடியான முரட்டு சிக்ஸ்பேக் உடம்பை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர். அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கி பிரபலமான பா. ரஞ்சித்துக்கு, ரஜினியின் கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார். தற்போது, நடிகர் ஆர்யா – பா. ரஞ்சித் காம்போவில் உருவாக உள்ள இந்த படத்திற்கு சல்பேட்டா பரம்பரை என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆர்யாவின் மீகாமன், அருண் […]

உயிர் பிழைத்த காஜல் அகர்வால் – இந்தியன் 2 விபத்து குறித்து கவலை!

ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தின் படிப்பிடில் நேர்ந்துள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டில் இந்தியன் 2படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணிகளை ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென  கிரேன் அறுந்து விழுந்தது. இந்நிலையில் தற்போது இது குறித்து நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்றிரவு என் சகாக்களின் எதிர்பாராத, அகால […]

சனம் ஷெட்டி என்னை ஒழிக்க முயன்றார்: தர்ஷன் குற்றச்சாட்டு

நடிகை சனம் ஷெட்டியும், பிக்பாஸ் புகழ் தர்ஷனும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நிச்சயதார்த்தமும் நடந்தது. தர்ஷனை ஹீரோவாக்க சனம் ஷெட்டி ஒரு படமே தயாரித்தார். இந்த நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்நிலையில் சனம் ஷெட்டி தன்னை ஒழித்துக்கட்ட முயற்சித்ததாக தர்ஷன் புதிய குற்றச்சாட்டு ஒன்றை கூறி உள்ளார். தர்ஷன் தனது இன்ஸ்ட்ராகிராமில் எழுதியிருப்பதாவது: சில உறவுகள் தோல்வி […]

அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை – நஸ்ரியா

திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த நஸ்ரியா திடீரென்று தனது முடிவை மாற்றிக்கொண்டு டிரான்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் அவரது கணவர் பகத் பாசிலுடன் இணைந்து நடிக்கிறார். மீண்டும் நடிக்க வந்தது குறித்து நஸ்ரியாவிடம் கேட்டபோது, ‘கல்யாணத்துக்கு பிறகு ஒரேயொரு படத்தில்தான் நடித்தேன். தற்போது பகத் பாசிலுடன் இணைந்து டிரான்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். நடிப்பதை நிறுத்தியது ஏன் என்று கேட்கிறார்கள். நடிப்பதை நிறுத்திவிட்டதாக யாரிடமும் நான் சொல்லவில்லை. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு […]

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து – 3 பேர் பலி !

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. கமல் இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் காஜல் அஃகர்வால் கதா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விவேக், டெல்லி கணேஷ், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு  செய்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ […]

ஜகமே தந்திரம்’… தனுஷ் பட மோஷன் போஸ்டர் ரிலீஸ்…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தனுஷ்40 படத்தை வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்றது. சுருளி என்ற பாத்திரத்தில் தனுஷ் நடிப்பதால் இதன் டைட்டில் சுருளி என்று கூறப்படுகிறது. அத்துடன் தனுஷ் […]

வலிமை ஷூட்டிங்கில் அஜித் கிழே விழுந்த வீடியோ…

அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நேர்கொண்ட பார்வை பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில்  “வலிமை” படத்தில் நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஜித் ரசிகர்களுக்கு இன்று அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தி ஒன்று வெளிவந்தது. அதாவது வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது டூப் இல்லாமல் பைக் ஓட்டும் […]

ரொமான்டிக் தலைப்புடன் களமிறங்கும் அதர்வா…

நடிகர் அதர்வா தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தின் நாயகி அனுபமா பரமேஸ்வரனின் பிறந்தநாளான இன்று படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் […]

தலைவர் ஆன் டிஸ்கவரி: பியர் கிரில்ஸ் வெளியிட்ட மோஷன் போஸ்டர்!!

நடிகர் ரஜினிகாந்த மற்றும் பியர் கிரில்ஸ் மேற்கொண்ட பயணம் விரைவில் டிஸ்கவரி சேனலில் வெளியாகும் என மோஷன் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.   உலக புகழ்பெற்ற பியர் க்ரில்ஸின் காட்டு பயண சாகசமான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் ஹாலிவுட் ஸ்டார்கள் வரை பலர் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் […]
Page 2 of 428«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news