Category: Cinema

தமிழ் கற்றுக் கொள்வதற்கு நேரம் இல்லை என கூறிய ஜீவா படத்தின் நடிகை

றெக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரத்தினா சிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் பெயரிடப்படாத ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தெலுங்கு திரையுலகின் மிக பிரபலமான ரியா சுமன், ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இன்னிலையில் இந்த படத்தை பற்றி நடிகை ரியா சுமன் கூறியதாவது : தமிழில் என் முதல் படம் என்பதையும் தாண்டி, எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நினைத்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். […]

7 கோடி எங்கே? விஷாலிடம் கேட்கும் தயாரிப்பாளர் சங்கம்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால். தலைவர் ஆன பிறகு அவர் தமிழ் சினிமாவில் கொண்டுவந்த மாற்றங்கள் பல. ஆனால் அவை அனைத்திற்கும் யாரும் ஆதரவு தரவில்லை. ஆரம்பம் முதலே விஷாலுக்கு எதிர்ப்புகள் அதிகம் இருந்த நிலையில் இப்பொழுது தயாரிப்பு சங்கத்தின் வைப்புநிதி 7 கோடி இல்லை என்று புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பி இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் விஷாலை பதவி விலககோரி தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டி போராட்டம் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நூறு விஜய் சேதுபதி வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது – போஸ் வெங்கட்

கடந்த மாதம் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டம் முழுவதும் சேதமடைந்தது. இதற்க்கு தன்னார்வல தொண்டர்கள், கட்சி பிரமுகர்கள்திரை பிரபலங்கள் உட்பட பலர் தங்களால் ஆனா உதவிகளை செய்தனர். அதில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை பற்றி போஸ் வெங்கட் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : எனக்கு சொந்த ஊர் அறந்தாங்கி. கஜா புயல் அடிச்ச மறுநாள், ஊர்லேருந்து அண்ணன் போன் பண்ணினாரு. எல்லாம் போச்சுடான்னு […]

இயக்குனராகும் பிரபல நடிகரின் மகன்!

தமிழ் சினிமாவில் சந்தான பாரதிக்கு ரசிகர்களிடம் ஒரு தனி மவுசு உள்ளது. பல வெற்றிப்படங்களை இயக்கி உள்ளா. நடிப்பிலும் காமெடி, வில்லத்தனம், குனச்சித்திரம் என்றும் எந்த கதாப்பாத்திரமானாலும் சிறப்பாக நடிப்பார். ஆனால், அவரது குடும்பம் பற்றில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவருக்கு ஒரு மகன் உள்ளர். அவர் பெயர் சஞ்சய் பாரதி. இந்நிலையில், சஞ்சய் பாரதி தமிழ் சினிமாவில் விரைவில் இயக்குனராக அறிமுகம் ஆகவுள்ளார். இவர், ஏற்கெனவே இயக்குனர் ஏ.எல்.விஜயிடம், உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், சஞ்சய் பாரதி […]

அப்பலோவின் மர்மம் படமாகிறதா? ஜெயலலிதாவின் வரலாறு

இயக்குநர் கெளதம் மேனன் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குநர். அவர் இப்பொழுது படங்கள் மட்டும் இன்றி, வெப் சீரியஸ் இயக்குவதற்கும் தயாராகியுள்ளார். பிரபல வெப் நிறுவனத்திற்கு அவர் இயக்க இருக்கும் வெப் சீரியஸ் என்ன தெரியுமா? முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு. இதில் ஜெயலலிதாவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இன்னும் சில பிரபலங்களும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெவின் வரலாறு என்றவுடன் நாம் பார்க்க நினைப்பது ஒன்றே ஒன்றுதான். அந்த அப்பலோவில் […]

பேட்ட படத்தின் சென்சார்? படக்குழுவினரின் நிலை

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் பேட்ட. இந்த படத்தின் சென்சார் இன்று நடக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. சமூக பிரச்சனையை சொல்லும் கதையாக பேட்ட உள்ளது என பேசப்பட்டு வரும் நிலையில் இந்த படத்திற்கு எத்தனை கட் வரும்,  சென்சார் தரப்பில் இருந்து வேறு எதுவும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறதா என்ற குழப்பத்தில் படக்குழுவினர் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  என்ன நடந்தாலும் பேட்ட மரண மாசாக வெளிவரும் […]

விஸ்வாசம் படத்தின் டீசர் – தேதி அறிவிப்பு

தலயின் விஸ்வாசம் படத்தின் டீசர் எப்பொழுது வரும் என தல ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். இன்னிலையில் விஸ்வாசம் படத்தின் டீசர் தேதியை படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர். படத்தின் டீசர் வரும் கிறிஸ்மஸ் அன்று டிசம்பர் 25 வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். வீரம் டீசர் தல ரசிகர்களை எவ்வாறு கவர்ந்ததோ அதே மாஸ் விஸ்வாசம் டீசரில் இருக்கும் என கூறப்படுகிறது.

ஆஸ்கார் போட்டிக்கு சென்ற இந்திய திரைப்படத்தின் நிலை?

ஆஸ்கார் விருது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் நடைபெறும். இதில் அந்த நாட்டு படங்களை தவிர வேற்று மொழி படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம். இதுவரை 3 இந்திய படங்கள் மட்டுமே ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவை விருதை பெறவில்லை. அதுபோல இந்த வருடம் இந்தியா சார்பில் வில்லேஜ் ராக்ஸ்டார் படம் பரிந்துரைக்கப்பட்டது. வேற்று மொழி திரைப்படங்களில் இருந்து 9 படங்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்துகொள்ளப்படும். அந்த 9 திரைப்படங்களின் பட்டியலில் வில்லேஜ் ராக்ஸ்டார் படம் இல்லாதது இந்திய […]

இளையராஜாவைவிட யுவன்தான் பெஸ்ட்டா ? தனுஷ் விளக்கம்

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. இந்த படத்தில் தனுஷ் அதே குறும்புக்கார ரவுடியாகவும், நாயகியான சாய் பல்லவி ஆனந்தி கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து வரலட்சுமி, கிருஷ்ணா, ரோபோ சங்கர், வித்யா பிரதீப், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் 21இல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மாரி 2’ படத்தின் பத்திரிகையாளர்கள் […]
Page 19 of 110« First...10«1718192021 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news