Category: Cinema

கான்ஸ் திரைப்பட விழா: கண்களைப் பறிக்கும் ஆடையுடன் பாலிவுட் நடிகைகள்

கான்ஸ் திரைப்பட விழா தொடங்கியுள்ள நிலையில், பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா மற்றும் கங்கணா ரணாவத் ஆகியோர் அதில் கலந்துக் கொண்டனர். சன்னி பிரெஞ்ச் ரிவேரியா எனும் சுற்றுலாத் தலத்தில் கான்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.  இதில் பிரபல தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ராவும், கங்கணா, ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், மற்றும் பிரபல தொலைக்காட்சி நடிகை ஹினா கான் கண்கவரும் ஆடையை அணிந்து அனைவரையும் கவர்ந்தனர்.

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடிக்கும் புதிய படம்

‘குப்பை கதை’ படத்தை தொடர்ந்து நடன இயக்குனர் தினேஷ் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவா நடிக உள்ளார். இந்த படத்தை பற்றி இயக்குனர் கூறுவது..‘நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறான். இந்த நிலையில், அவன் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக விரும்புகிறான். அவனுக்கு […]

இனிதே தொடங்கும் ‘இந்தியன் 2’படப்பிடிப்பு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் இந்தியன். தற்போது இந்தப் படத்தின் 2ம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு திருத்தி வைக்கப்பட்டது. இதனால் இயக்குனர் சங்கர் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்தக் கதையைக் கூறி அதற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக புத்தகத்தையும் வழங்கியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் […]

ஜெயம் ரவி படத்தில் யோகிபாபு ஹீரோவா! ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ‘அடங்க மறு’ படத்தின் வெற்றியை அடுத்து அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி இயக்குனராக உருவெடுக்க உள்ளார். இவர் இயக்கம் முதல் படத்தில் யோகிபாபு நடிக்க உள்ளார்
Inandoutcinema Scrolling cinema news