Category: Cinema

மணிரத்தினம் ஜி.வி.பிரகாஷ் இணையும் புது படம்?

இயக்குநர் மணிரத்தினம் செக்க சிவந்த வானம் பிறகு பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மணிரத்தினம் தனது தயாரிப்பில் புது இயக்குநரை அறிமுகம் செய்ய இருக்கிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருப்பதாகவும் அதன் இசையை 96 புகழ் கோவிந்த் வசந்தா கையில் கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேட்ட படத்திற்கு தியேட்டர் இல்லை? தெலுங்கு சினிமா

பேட்ட படம் வரும் 10 ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் பல திரயரங்குகளை கைப்பற்றிய பேட்ட படக்குழுவினருக்கு தெலுங்கு சினிமா அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தெலுங்கில் பேட்ட படத்திற்கு போதிய தியேட்டர்கள் இல்லை. காரணம் தெலுங்கில் முன்னனி நடிகர்களான பாலகிருஷ்ணா, ராம்சரன் மற்றும் வெங்கடேஷ் நடிக்கும் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யபடுவதால் இந்த பிரச்சனை என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

துப்பாக்கி முனை படத்தின் வெற்றிவிழா கொண்டாடிய படக்குழு

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஹன்சிகா நடிப்பில் கலைப்புலி எஸ். தாணு அவர்களின் நிறுவனமான V CREATIONS தயாரித்து திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் தூப்பாக்கி முனை. எல். வி. முத்து கணேஷ் இசையமைப்பு மற்றும் ராசமதி ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த திரைப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த 25-வது நாள் வெற்றிவிழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி […]

சீமானுக்கு ஆதரவாக சிம்பு ரசிகர்கள் – கடும் கோவத்தில் விஜய் ரசிகர்கள்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்திய பேச்சில் நடிகர் விஜயை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார். சமீபத்தில் அவருடைய விஜய் பற்றின பேச்சுகள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சீமான் விஜய்யிடம் ஒரு கதையை சொல்லி வைத்திருந்தார். விஜய்யும் முன்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் நாட்கள் ஆக ஆக விஜய் வேறு வேறு படங்களில் நடித்ததால், சீமான் படத்தில் விஜயால் நடிக்க முடியவில்லை. மேலும் அதில் அதில் அதிகபடியாக அரசியல் வசனங்களும், சர்ச்சை காட்சிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் […]

இளையராஜா, கங்கை அமரன் மோதல்?

இசைஞானி இளையராஜா அவர்கள் கல்லூரி விழா ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு இப்பொழுது இருக்கும் இசைஅமைப்பாளர்கள் கம்போஸகர்களாக இல்லை என கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கங்கை அமரன் அதற்கு என்னால் மீண்டும் இசை அமைக்க முடியாது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதை தவறாக இளையராஜா ரசிகர்கள் எடுத்து கொண்டு அவரை விமர்சிக்க, கங்கைஅமரன், நானும் என் அண்னனும் இப்படித்தான் பேசிக்கொள்வோம் நீங்கள் தவறாக எடுத்து கொள்ளாதீர்கள் என […]

ஆர்யாவிற்கு திருமணம் மணப்பெண் ரெடி?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முக்கியமான ஒருவர். சர்ச்சைகள் முதல் வதந்திகள் வரை அனைத்திலும் அவர் பெயர் அடிபட்டு கொண்டே இருக்கும். அதில் முக்கியமான ஒன்று அவரது கல்யாணம். ஆர்யாவிற்கு பெண் பார்த்த கலரசஸ் நிறுவனம் கூட அவருக்கு சரியாண மணப்பெண்னை காண்பித்து கொடுக்க முடியாமல் தோற்று போனது. ஆர்யாவின் நண்பர்களும் இதே போல ஆர்யாவின் மனதுக்கு பிடித்தவாறு ஒருவரை தேர்வு செய்து தர முடியவில்லை. அதனாலோ என்னவோ ஆர்யா அவரே தனக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுத்து […]

ஐரா – இரட்டை வேடத்தில் நயந்தாரா

நயந்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் ஐரா. KJR பிலிம்ஸ் சார்ப்பில் இயக்குநர் சர்ஜூன் இயக்குகிறார். சர்ஜூன் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் இயக்குநர். ஐரா படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டீசரை பார்க்கும் பொழுது கிராமத்து பெண்ணாகவும், நகரத்து பெண்ணாகவும் இரண்டு தோற்றங்களில் நயந்தார இருக்கிறார். கண்டிப்பாக இது இரட்டை வேடம் தான் என்பது போல் தெரிகிறது. படத்தின் டீசரின் காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டும் தொனியில் இருக்கிறது. இந்த படத்தின் ரிலீசை […]

இயேசு என்ன சொல்கிறார்? லவ் பண்ண சொல்கிறார் – மிரட்டும் மெஹந்தி சர்க்கஸ் டீஸர்

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மெஹந்தி சர்க்கஸ். இந்த படத்தை ராஜு முருகன் இயக்குகிறார். தனக்கென ஒரு ஸ்டைலை கொண்டு தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கவர்ந்த இயக்குனர். அவரது படைப்பில் குக்கூ அனைவரின் மனதையும் கவர்ந்து சென்றது. அதே வரிசையில் மெஹந்தி சர்க்கஸ் படமும் நிற்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

பாலிவுட்டில் கால் பதிக்கும், வீரப்பன் கதையில் நடித்த பிரபல நடிகை

கொல கொலயா முந்திரிக்கா, விண்மீன்கள், வனயுத்தம் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பாவனா ராவ். இதில் வனயுத்தம் திரைப்படம் வீரப்பன் வாழ்க்கையை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டது. இவர் கன்னட படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் வெளியான சத்ய ஹரிஷ்சந்திரா என்ற கன்னட படத்தில் சிறப்பாக நடித்தற்காக விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது சிவராஜ்குமார், சுதீப், எமி ஜாக்சன் நடிப்பில் தயாராகும் த வில்லன் என்ற படத்திலும் […]
Page 13 of 115« First...10«1112131415 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news