Category: Cinema

வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்த விஜய்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு கடந்த 5-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் என்.எல்.சி. சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7-ந் தேதி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது பற்றி அறிந்ததும் என்.எல்.சி. சுரங்கம் முன்பு திரண்ட விஜய் ரசிகர்கள், பா.ஜனதாவினரை கண்டித்தும், மாஸ்டர் படப்பிடிப்பை தொடர்ந்து இங்கேயே நடத்தக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். […]

கேஜிஎப் 2’ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து தற்போது படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்திவருகிறார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் இந்த படத்தில் தமிழில் ’சாது’ என்ற படத்தில் அர்ஜூன் ஜோடியாக நடித்தவரும் பிரபல பாலிவுட் நடிகையுமான ரவீனா டாண்டன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த […]

தனுஷ் 44 படத்தின் புதிய அப்டேட்..

நடிகர் தனுஷ் இப்போது மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய சுருளி என்ற படம் ரிலிஸுக்குத் தயாராகியுள்ளது. மாரி செல்வராஜ் படத்துக்குப் பின் தனுஷ் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதற்குப் பிறகு சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷ் 44 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை தனுஷே எழுதுகிறார். இன்னும் யார் இயக்குனர் என்பது முடிவு செய்யப்படாத நிலையில் […]

வித்தியாசமான கதாபாத்திரத்தில் சாக் ஷி!

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில், ராய் லட்சுமி நாயகியாக நடிக்கும் படம், சிண்ட்ரல்லா. இதில், சாக் ஷி அகர்வால், முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.இது குறித்து சாக் ஷி கூறுகையில், ”இப்படத்தில், என் கதாபாத்திரம் வித்தியாசமானது. படத்தின் வெளியீட்டை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்,” என்றார்.

நயன்தாரா படத்தில் பிக் பாஸ் நடிகை..

ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை எழுதி நடித்த ‘எல்.கே.ஜி’ படம், பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம், அடுத்த படத்தையும் தங்களுக்கே செய்யுமாறு அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தது. எனவே, புதிய படத்துக்கான கதையையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து எழுதிய ஆர்ஜே பாலாஜி, அதில் அவரே நாயகனாக நடித்து, இயக்கி வருகிறார். அவரோடு இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பை கவனிக்கிறார். ‘மூக்குத்தி அம்மன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் […]

பாடகராக மாறிய பிரபல காமெடி நடிகர்

பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் முதல் முதலாக ஒரு பாடலை பாடி உள்ளதாகவும், அந்த பாடல் இன்று மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பிரபல குணச்சித்திரம் மற்றும் வில்லன் நடிகரான போஸ் வெங்கட் முதல் முதலாக இயக்கிவரும் கன்னிமாடம் என்ற படத்தில் ரோபோ சங்கர் ஒரு பாடலை பாடி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் நடிகர் ரோபோ சங்கர் சற்று முன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ’ஹரிசாய் இசையில் தான் ஒரு […]

சிபிராஜ் படத்தில் இருந்து விலகிய பூஜாகுமார்

சிபிராஜ் நடிப்பில் தற்போது ‘கபடதாரி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். சில காரணங்களால் பூஜா குமார் இப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார். இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். இவர் 90களில் தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து, மிகவும் புகழ்பெற்ற ஹீரோயினாக […]

தர்ஷனை கிழித்த பிக்பாஸ் பிரபலம்!

நடிகை வனிதா விஜய்க்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னதாகவே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் இதன் காரணமாக இரண்டாவது வாரமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் வனிதா. ஆனால் அவர் போன பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி போரானாது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவே வனிதாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பியது, முதல் இன்னிங்ஸில் சொதப்பிய வனிதா, இரண்டாவது இன்னிங்ஸில் […]
Page 10 of 428« First...«89101112 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news