Category: Cinema

ராஷ்மிகாவுடன் இந்த செயலால் கோபமடைந்த படக்குழு…

கிரிக் பார்டி படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. இதன்பின் அப்படியே தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் இன்னும் அதிகபடியாக பிரபலமடைய தமிழ் சினிமாவில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் அடுத்து இரண்டாவதாக நடிகர் கார்த்திக் வைத்து படம் எடுக்கிறார். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் முதன் முதலாக தமிழ் […]

அங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்!!

ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பூஜை இன்று காலை நடைப்பெற்றது.இதில் படக்குழுவினருடன் இயக்குனர் திரு.கே.பாக்கியரஜ், திரு. ஜாகுவார் தங்கம், ரோபோ சங்கர், கவிஞர் சினேகன், ஜான் விஜய், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  இப்படம் குறித்து இயக்குனர் எம்.சித்திக் கூறும்போது, ‘எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் […]

முதன்முதலாக துப்பாக்கி பிடித்த பிரபல நடிகை

ஷ்ரத்தா கபூர் : இதுதான் எனது முதல் மும்மொழி திரைப்படம். நான் இதற்கு முன் ஓகே கண்மணி ரீமேக்கில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் அருவி என்ற படம் பார்த்தேன். எப்போதும் ஷூட்டிங்கிலேயே இருப்பதால் நிறைய படங்களை பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. இந்த படத்துக்காக இயக்குனர் என்னை தேர்வு செய்தது என்னுடைய அதிர்ஷ்டம். கதையை கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. அதிலும் பிரபாஸ் நடிக்கிறார் என்றும் இதுவொரு மும்மொழி திரைப்படம் என்று கூறியதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன். இந்த படம் […]

‘2 வருடங்கள் ஆகும் என நினைக்கவில்லை’ -பிரபாஸ்

சாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை. அது படமாக பார்க்கும் போது இன்னும் புரியும் என நினைக்கிறேன். ‘சாஹோ’ படத்துக்காக 2  வருடங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கவில்லை. பாகுபலி படத்துக்குப் பிறகு நல்ல படங்கள் பண்ணனும் என நினைத்தேன். சுஜித் சொன்ன கதை அப்படியிருந்தது, தயாரிப்பாளரும் நிறைய முதலீடு பண்ணிவிட்டார்கள். ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சிக்கும் நிறைய முன் தயாரிப்பு இருந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹாலிவுட் என பல இடங்களைச் சேர்ந்த சண்டைக் […]

சண்டைக்கு தயார் நிலையில் த்ரிஷா

நடிகை த்ரிஷா, தற்போது எல்லா படங்களிலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளில் மட்டும் நடிக்கிறார். அந்த வகையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய இயக்குநர் சரவணன் இயக்கத்திலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையிலும் உருவாகும் ராங்கி படத்தில் நடிக்கிறார்.  இந்தப் படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஏற்கனவே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. அதில், நடிகை த்ரிஷா, இரும்புக் கம்பி ஒன்றில் ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார். கையில் […]

பயங்கர கேம் விளையாடும் ஐஸ்வர்யா!!?

பிக்பாஸ் சீசன் 2வில் கடைசி நிமிடத்தில் டைட்டிலை இழந்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாசுக்கு முன்பு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும்புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படங்களில் நடித்தார். நடித்து வெளிவந்த படங்களும் ஓடவில்லை. புதிய வாய்ப்புகளும் இல்லை என்கிற நிலையில்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் போனார்.  பிக்பாசுக்கு பிறகு ஓரளவுக்கு விளம்பரமாகி விட்டதால் ‛கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா, அலேகா, கன்னித்தீவு’ என வாய்ப்புகள் வரிசை கட்டின. ஆனால் எந்த […]

டாப்சீயின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!!

தனுசுடன் ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்சி, அதன்பிறகு ஆரம்பம், காஞ்சனா, வை ராஜா வை, கேம் ஓவர் படங்களில் நடித்தார். சமீபகாலமாக பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் மிஷன் மங்கள் படம் வெளியாகி உள்ளது.  இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கிளாமர் போட்டோக்களையும் வெளியிட்டு வரும் டாப்சி, தற்போது கருப்பு நிறத்தில் உடையணிந்த கவர்ச்சியான போட்டோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த போட்டோவிற்கு 8.71 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன. 
Page 1 of 29212345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news