இணையத்தில் வைரலாக பரவும் விஜய் சேதுபதியை பற்றி கார்த்திக் சுப்பாராஜின் பழைய பதிவு – விவரம் உள்ளே

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான படம் தென்மேற்கு பருவக்காற்று. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என தொடர்ச்சியாக ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி நாயகனாக வளர்ந்தார்.

இப்போது இமைக்கா நொடிகள், விக்ரம் வேதா, 96, செக்கச்சிவந்த வானம் என ஹிட் படங்கள் கொடுத்து வசூல் நாயகனாகவும் தன்னை வளர்த்துக் கொண்டார். தற்போதுள்ள நடிகர்களில் அதிகப் படங்களில் ஒப்பந்தமாகி, நடித்து வருபவர் விஜய்சேதுபதி என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், நவம்பர் 24-ம் தேதி முதல் விஜய்சேதுபதியின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

பலரும் இது தான் வளர்ச்சி என்று கொண்டாடி வருகிறார்கள். தென்மேற்கு பருவக்காற்று வெளியாவதற்கு முந்தைய நாள், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று நாளை வெளியாகிறது. பெரிய திரையில் விஜய்சேதுபதியை காண ஆவலாக இருக்கிறேன். விஜய்சேதுபதிக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டு இருப்பார்.

அப்பதிவுக்கு கீழே அருண் ப்ரியன் என்பவர் விஜய்சேதுபதி யார் என்று கேட்க அவரைப் பற்றி விரைவில் உங்களுக்குத் தெரியவரும் என்று ஆங்கிலத்தில் பதிலளித்திருப்பார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இப்பதிவின் புகைப்படம் தான் தற்போதைய ட்விட்டர் ட்ரெண்ட்டாக இருக்கிறது. இந்த புகைப்படத்தை விஜய்சேதுபதி ரசிகர்கள் இணையத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர். அந்த புகைப்படம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news