நாம் தமிழர் சீமான் இயக்கத்தில் சிம்பு – கதாபாத்திரம் இதுதான்

செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மஹத், கேத்ரீன் தெரேசா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு நடிப்பில் விரைவில் ஒரு படத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு இருக்கும் என்றும் தன்னுடைய பாணியில் இருக்கும் என்றும் பேட்டி ஒன்றில் சீமான் கூறியுள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிம்பு மருத்துவர் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சிம்பு தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். எனவே மாநாடு படத்துக்கு பிறகு சீமான் இயக்கும் படத்தில் சிம்பு நடிப்பார் என்று கூறப்படுகிறது. விரைவில் இது  பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news