வருதப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதே போல நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அடுத்த மாதம் 13-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதையடுத்து, இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்திலும், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இன்னிலையில் பள்ளி மாணவர்கள் முன் சிவகார்த்திகேயனும், அவருக்கு அருகில் இயக்குநர் திரு நின்றுகொண்டிருப்பதுபோல புகைப்படம் உள்ளது.
இன்னிலையில், இந்த புகைப்படம் குறித்து இயக்குநர் திரு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், சிவகார்த்திகேயனுடன் நான் இருக்கும் புகைப்படம்குறித்து கேட்பவர்களுக்கு, நாங்கள் இருவரும் இணைந்து ஆவணப்படம் ஒன்றை இயக்க உள்ளோம். நல்ல நோக்கத்திற்காக இந்தப் படம் அமையும். மற்ற தகவல்கள் விரைவில். நன்றி என இயக்குநர் திரு கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.