மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் இறுதியாக செக்க சிவந்த வானம் படம் வெளியானது. சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந் சாமி போன்ற முன்னணி நாயகர்களின் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தை பற்றிய தகவல் கசிந்துள்ளது. இந்த படம் மக்களிடையே மிகவும் பிரபலமான பொன்னியின் செல்வன் கதையை அடிப்படையாக கொண்டதாக சரித்திர படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நாயகர்களாக விஜய், விக்ரம், சிம்பு போன்ற முன்னணி நாயகர்கள் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவல் உண்மையாக இருந்தால் மூன்று திரை நட்சத்திரங்களும் இந்த படத்தின் மூலம் முதன் முறையாக இணைகின்றனர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், சிம்பு இரண்டு பேருமே நடித்து விட்டனர். நடிகர் விஜய் மணிரத்னம் இயக்கத்தில் இதுவரை நடித்ததில்லை. இதில் விஜய் நடிப்பது மட்டும் உறுதியானால் முதன் முறையாக இந்த கூட்டணியில் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news