Inandoutcinema - Tamil cinema news

சமூக வலைதளத்தில் ஹெச்.ராஜாவை வருதேடுக்கும் இணையவாசிகள் – விவரம் உள்ளே

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட வழியில் செல்ல உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் காவல்துறைக்கும், ஹெச்.ராஜாவுக்குமிடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது, நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசினார்.

இதனிடையே அவர் மீது காவல்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இதற்கு நீதிபதிகள் ஹீலுவாடி ரமேஷ் மற்றும் கல்யாண் சுந்தரம் அமர்வு குழு மறுப்பு தெரிவித்துவிட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்கு விசாரிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல் குமார் அமர்வு தானாக முன்வந்து விசாரிக்க முடிவெடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஹெச்.ராஜா 4 வாரத்துக்குள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பின்னர் தன்னை விசாரிக்க சி.டி.செல்வம் அமர்வுக்கு அதிகாரமில்லை என ஹெச்.ராஜா, தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்.

இந்நிலையில் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு ஆஜரானார். அப்போது ஹெச்.ராஜா, நான் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியது உண்மைதான். காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது, உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு கூறிவிட்டேன். அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன் எனத் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

அவர் மன்னிப்புக் கோரியதால், இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டனர். இதற்க்கு சமூக வலைதளத்தில் ஹெச்.ராஜாவை வடிவேலுவுடன் ஒப்பிட்டு, இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர். மண்டியிட்ட ஹெட்ச் ராஜா என்ற பெயரில் ஆஷ் டாக் உருவாக்கி அந்த ஆஷ் டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news