September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

விஜய் சேதுபதியுடன் இணையும் சிம்பு, விக்ரம் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே

நடிகர் விஜய் சேதுபதி அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி, செக்கச்சிவந்த வானம், 96, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. இதுதவிர, சை ரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்குப் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கோகுல் இயக்கத்தில் ஜூங்க படம் சமீபத்தில் வெளியாகியது.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். அதன் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வந்தார். இந்த படம் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றனர். இன்னிலையில் சிம்பு நடித்த வாலு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய் சந்தார்.

இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக ஹன்சிகா நடித்தார். சந்தானம், விடிவி கணேஷ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். 2015-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. இதைத் தொடர்ந்து ஸ்கெட்ச் படத்தை இயக்கினார் விஜய் சந்தர். இந்தப் படத்தில் விக்ரம், தமன்னா இருவரும் ஜோடியாக நடித்தனர்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்தப் படம், இந்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு ரிலீஸானது. இந்நிலையில், அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் இயக்குனர் விஜய் சந்தர். இந்தப் படத்தை விஜய வாகிணி ஸ்டுடியோ தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news