September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

ரசிகர்களின் நேரத்தை நிச்சயம் வீணடிக்க மாட்டேன்… MR.சந்திரமவுலி இயக்குனர் உறுதி!

சென்னை: தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சமர்… படங்களையடுத்து இயக்குனர் திரு இயக்கியுள்ள படம் மிஸ்டர் சந்திரமவுலி

முதல் முறையாக நவரச நாயகன் கார்த்திக், அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். கூடவே கவர்ச்சிக்கு வரலக்ஷ்மி, ரெஜினா கஸாண்ட்ரா, காமடிக்கு சதீஷ் என படத்தின் ஹைப் கூட்டியது. வரும் ஜூலை மாதம் 6ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது..

இந்நிலையில், மிஸ்டர் சந்திரமவுலி பற்றி படத்தின் இயக்குனர் திரு கூறுகையில்; படம் துவங்கியது முதல் இதுவரை  positive ஆகவே இருந்து வருகிறது. இதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் தான் முழுக்க முழுக்க காரணம். படத்தின் ப்ரி புரோடக்‌ஷன் பணிகளில் இருந்து வெளியீடு வரை அவர் காட்டிய நம்பிக்கை, சலுகை அபரிமிதமானது.

பிஸியான நடிகர்கள் அனைவரையும் ஒன்றாக சேர்த்தது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. கவுதம் கார்த்திக், வரலக்ஷ்மி, ரெஜினா கஸாண்ட்ரா, சதீஷ் என அனைவருமே நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையிலும், அவர்கள் கொடுத்த முழுமையான ஒத்துழைப்பின் காரணமாக மட்டுமே இந்த படத்தை குறித்த நேரத்தில் முடிக்க முடிந்தது.

மிஸ்டர் சந்திரமௌலியில் பொழுதுபோக்கு மற்றும் எமோஷன் பார்வையாளர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும், அவர்கள் செலவழித்த நேரத்தை நிச்சயம் வீணாக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

இப்படத்தில் ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். போஃப்தா மீடியா நிறுவனம் சார்பில் தனன் செயந்த் தயாரிக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news