அடுத்த ஜெயலலிதாவாக களத்தில் இறங்கும் பிரபல பாலிவுட் நடிகை

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா, இவர் தமிழகத்தின் ‘இரும்பு பெண்’ இன்று அனைவராலும் அழைக்கப்பட்டார் .தனி ஒரு பெண்ணாக இருந்து அ.இ.அ.தி.மு.க கட்சியை நடத்தி கொண்டு இருந்தார் . அவரை பற்றி பல சர்ச்சைகள் இருப்பினும், அவர் பெண்களுக்கு எடுத்துக்காட்டாய் இருந்தார். அவரது வாழ்கை வரலாற்றை படமாக எடுப்பதற்கு நிறைய இயக்குனர்கள் போட்டிப்போட்டு கொண்டு இருக்கின்றனர்.அந்த வரிசையில் பரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கத் திட்டமிட்டிருந்தனர்.

பிரபல இயக்குனர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு வெப்-சீரீஸாக எடுத்துக்கொண்டிருக்கிறார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திர சேகரும் நடிக்கின்றனர்.

இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். இந்த தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டது. சமீபத்தில் வெளிவந்த `மணிகர்ணிகா’ படத்தில் ஜான்சி ராணியாக நடித்துள்ளார், இந்த படம் பெரியளவில் பேசப்பட்டது. ‘தலைவி’ படத்தில் கங்கனா ரனாவ நடிப்பு இந்தியா முழுவதும் பேசப்படும் என படக்குழு கூறியுள்ளது. மேலும் இந்தப்படத்துக்கு ஜி .வி பிரகாஷ் இசையமைக்கிறார்,பாகுபலி படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு இணை கதாசிரியராக இணைகிறார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news