யார் அந்த ஏழு பேர் “மீம்” – சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மக்களே!

சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் யார் என்று எனக்கு தெரியாது என சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் கூறியதுதான் இன்று இணையத்தளத்தின் தலைப்பு செய்தி. இந்த கருத்துக்கு யாரு என்ன சொல்லி இருக்காகன்னு அப்படியே ஒரு ரவுண்டு போய்டுவருவோம் வாங்க…

6 அத்தியாயம் படத்தின் இயக்குனர் கேபில் சங்கர்,  “7 பேர் பெயரை எல்லாரையும் சொல்லச் சொல்லுங்க பார்ப்போம் என்று ரஜினி ரசிகர்கள் மறு கூவல் கூவுவதை பார்க்கும் போது பாவமாய் இருக்கு. எல்லாருக்கும் தெரிய வேண்டியது இல்லை. நாட்ட ஆளணும்னு ஆசைப்படறவங்களுக்கு தெரிஞ்சிருக்க வேண்டாமாங்குறதுதான் இங்கே கேள்வியே? “என்று கேட்டுள்ளார்.

அடுத்து அல்டிமேட்:

இவர் போட்டுள்ள மீம்மை பாத்தா.. இனிமேல் பள்ளியில குழந்தைங்க கூட இப்படி சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க போல இருக்கே…

அநியாத்துக்கு நல்லவரா இருக்கிங்களே ரஜினி

நான் பாட்டுக்கு சிவனேன்னுதானயா போயிக்கிட்டு இருந்தேன்…

ரஜினியை எதாரத்தமானவர் என்றும் அப்பாவி என்றும் அவரது சிலர் கூறுவார்கள் அதற்காக இவர் போட்டுள்ள மீம்

நடிகை கஸ்தூரி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் மிக நல்லவராகவே இருக்கட்டும். ஆனால், தமிழக பிரச்னைகளை பற்றி அவர் அவசியம் தெரிந்து வைத்திருந்க்க வேண்டும். இது அறியாமை அல்ல கண்டுகொள்ளாத்து போல் உள்ளது என்று கூறியுள்ளார்.

 

பவர் ஸ்டாருக்கு தெரிஞ்சது கூட ரஜினிக்கு தெரியலையே பாஸ்!

சினிமா நடிகர் பவர் ஸ்டாரிடம் 7 பேர் பற்றிய கேள்விக்கு அவர்களைன் அனைவரது பெயரையும் கூறி நான் தமிழன் என்று ஸ்கோர் செய்கிறார்.

ரோபோவை அப்டேட் பன்னனும் ஜி!

பாஜக வின் கைப்பாவையாகத்தான் ரஜினி உள்ளா என்று அவரின் எதிர்பாளர்கள் கூறிவரும் நிலையில், இந்த இணையவாசி இப்படி போட்டிருக்கிறார். ‘ரோபோவை ரெடி பண்ணினா மட்டும் பத்தாது… அப்பப்போ அப்டேட் பண்ணனும்’..!

போதும் இதோட நிறுத்திக்குவோம். மேற்கண்ட மீம்கள் சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் தான். காரனம் இதில் பல மீம்கள் ரஜினியை தரம் தாழ்த்தவேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு கூட பரப்பப்பட்டிருக்கலாம். எது எப்படி இருந்தாலும் நாம் தெளிவான கண்ணொட்டத்துடனே இதுபோன்ற விஷியங்களை அனுக வேண்டும்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news