September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி தற்கொலை.

தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா ஆகும். இவர் 2016-2017 கல்வி ஆண்டில் மார்ச் 2017 இல் நடைபெற்ற மேல்நிலைக் கல்வி பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். 

2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், தனது கனவான மருத்துவக் கல்வி படிப்பது சாத்தியமாகவில்லை என்ற கவலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்னிலையில் அதே போன்று விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் நீட் தேர்வு எழுதினர்கள். அவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்னிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். கூலித் தொழிலாளியின் மகளான அவர் 12 வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். நேற்று, வந்த நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது.

அந்த விரக்தியில் அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர், கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் மருத்துவமனையில்தான் சேருவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்துவத்தில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news