Inandoutcinema - Tamil cinema news

புஜாராவின் சதத்தால் சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி – விவரம் உள்ளே

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டி தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இருவருமே தடுமாறினர். ஹேசல்வுட் வீசிய பந்தில், ராகுல் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரத்தில், முரளி விஜயும் 11 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை தாரை வார்த்தார். இந்திய அணி பெரிதும் நம்பியிருக்கும் கேப்டன் விராட் கோலியும் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து பட் கம்மின்ஸ் பந்தில் காவ்ஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.

ரகானே 13 ரன்களில் வெளியேறினார். அடித்து விளையாடிய ரோகித் சர்மா 61 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 37 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 4-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய புஜாரா, நிதானத்துடனும் நிலைத்து நின்றும் ஆடினார். அதன் பின்பு விக்கட்டுகள் அடுத்தடுத்து விழத்தொடங்கியது. ஒரு புறம் விக்கட்டுகள் வீழ்ந்தாலும், நிதானமாக ஆடிய புஜாரா சதத்தை பதிவு செய்தார்.

இறுதியில் ஓரிரு ஓவர் மீதமிருக்கையில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட் ஆனார்புஜாரா. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 87.5 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 250 எடுத்துள்ளது. ஷமி 6 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

 

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news