இரட்டை வேடத்திற்காக இந்த காரியத்தை செய்த நயன்தாரா – கே. எம் சர்ஜூன்

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன், கோலமாவு கோகிலா, இமைக்க நொடிகள் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது. இவரது நடிப்பில் கொலையுதிர் காலம், விஸ்வாசம், ஐரா போன்ற திரைப்படங்கள் அடுத்த வருட துவக்கத்தில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னிலையில் ஐரா படத்தின் புதிய தகவல் இன்று வெளியாகியுள்ளது. ஐரா ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். கலையரசன், யோகிபாபு, ஜே.பீ மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். கார்த்திக் ஜோகேஷ் எடிட்டிங் செய்ய, சுதர்ஷன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவள் பட புகழ் சிவ சங்கர் கலை இயக்குனராகவும், டி ஏழுமலை நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். கதை & திரைக்கதை பிரியங்கா ரவீந்திரன், வசனம் எழுதி கே. எம் சர்ஜூன் இயக்குகிறார்.

இன்னிலையில் இந்த படத்தை பற்றி இயக்குனர் கேஎம் சர்ஜூன் கூறியதாவது : தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தயாரிப்பாளரின் இயக்குநராக இருந்திருக்கிறார். தனது திறமைகளை நிரூபிக்கும் திரைப்படமாக மட்டும் இதை கருதாமல், நயன்தாரா மேடமிற்கு ஒரு சிறப்புப் படமாக இருக்க வேண்டும் என உழைத்தார்.

எனெனில் இது நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் திரைப்படம். தொழில்நுட்ப கலைஞர்கள் ஸ்கிரிப்ட்டில் என்ன கலந்துரையாடினார்களோ அதை திரையில் கொண்டு வர கடுமையாக உழைத்துள்ளனர் என இயக்குனர் கே. எம் சர்ஜூன் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news