நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு – விவரம் உள்ளே

நடிகை நயன்தாரா 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமான நயன்தாரா, இரண்டாம் படத்திலேயே ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிப்படியாக வளர்ந்து, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தார்.

தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இவரது திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் பத்திரிக்கைகள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் அழைக்கின்றனர். நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த அறம், வேலைக்காரன் போன்ற திரைப்படங்கள், அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது கொலையுதிர் காலம், விஸ்வாசம், மற்றும் சிவகார்த்திகேயன் திரைப்படம் ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இன்னிலையில் சர்ஜுன் இயக்கத்தில் அவர் புதியதாக நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஐரா என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news