Inandoutcinema - Tamil cinema news

கல்யாண வயசு பாடலை தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தின் அடுத்த சிங்கிள் ரெடி

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் வெளியான கல்யாண வயசு பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வரை இந்த பாடலை 21 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் இந்த படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளது. அந்த பாடலின் மேக்கிங் விடியோவை அனிருத் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவை இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news