Inandoutcinema - Tamil cinema news

ஆக்‌ஷன் திரில்லர் படம் எடுக்கும் மூடர்கூடம் இயக்குனர்!

சென்னை: “மூடர் கூடம்” படத்துக்கு பின்னர் நவீன் இயக்கியுள்ள படம் “அலாவுதீனின் அற்புத கேமரா”. பாண்டசி திரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் கயல் ஆணந்தி பிக் பாக்கெட் அடிக்கும் தொழில் செய்பவராக நடித்துள்ளார். “White shadow” நிறுவனம் சார்பில் நவீனே தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் சூட்டிங் பணிகள் முடிந்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வந்தன. தற்போது அந்த பணிகளும் முடிந்துள்ள நிலையில் இயக்குனர் நவீன் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்.

ஆக்‌ஷன் திரில்லரான இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹிரோவாக நடிக்கிறார், வில்லனான அருண் விஜய் நடிக்கிறார். நாசர், பிரகாஷ் ராஜ், ஜகபதிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகிக்கின்றனர். கதாநாயகியாக அர்ஜுன் ரெட்டி ஹிரோயின் ஷாலினி பாண்டே நடிக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார்.

இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நவீனின் 2வது படமான  “அலாவுதீனின் அற்புத கேமரா” டீசர் விரைவில் வெளியிடப்படும் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news