சென்னை: ரேடியோவில் தமிழ் திரைப்படங்களை நக்கலடித்து (நியாயமாகவும் தான்) விமர்சனம் செய்து பிரபலமானவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் நானும் ரவுடி தான், காற்றுவெளியிடை, கடவுள் இருக்கான் குமாரு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளர்.
இந்நிலையில், Rj பாலாஜி கதாநாயகனாக LKG என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், அவருக்கு ஜோடியக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். பிரபு என்பவர் இயக்குகிறார். இந்த படத்துக்கு கதை மற்றும் திரைகதையை ஆர்.ஜே. பாலாஜியே எழுதி உள்ளார். வேல்ஸ் பிளிம்ஸ் இண்டர்னேஷ்னல் சாபில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறர்.
படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில் வரும் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக ஆர்.ஜே.பாலாஜி 2ம் லுக் போஸ்டருடன் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.அந்த போஸ்டரில் இலவச மிக்சி, கிரைண்டருடன் பொங்கலுக்கு வரோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், விளம்பர பார்ட்னர்கள் அரசியல்வாதிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் விஜயின் சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகளை நீக்கக்கோரி அரசியல் கட்சியினர் பரபரப்பை ஏற்படுத்தினர். இது, படத்துக்கு புரோமோஷனாகவே மாறியது. எனவே பெரியபடங்கள் போன்று சிறு படங்களுக்கும் இதுபோன்ற விளம்பரங்களை அரசியல்வாதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்று ஆர்.ஜே.பாலாஜி தாழ்மையுடன் கேட்டுக்கொண்டிருக்கிறாார்.