ஆஸ்திரேலியாவிற்கு தண்ணி காட்டிய பும்ரா – தடுமாற்றத்தில் இருக்கும் இந்திய அணி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 169.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். 22 ரன்கள் சேர்த்து இருந்த மார்கஸ் ஹாரிஸ் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு துவக்க வீரர் பிஞ்ச் 8 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்தில், மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் காவ்ஜாவும் நீடிக்கவில்லை. 21 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷான் மார்ஷ் 61 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். டிராவிஸ் ஹெட் 20 ரன்களில் பும்ரா பந்தில் கிளீன் போல்டு ஆனார். மிட்செல் மார்ஷ் 8 ரன்களில் ஜடேஜா சுழலில் ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை பும்ரா வந்த வேகத்தில் பெவிலியன் அனுப்பினார். இதனால், 66.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணியைவிட ஆஸ்திரேலிய அணி 292 ரன்கள் பின் தங்கியுள்ளது. பின்னர் தனது 2வது இன்னிங்க்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் அதிர்ச்சி அளித்தனர்.

முதல் 12 ஓவர்களில் விக்கட் விழாமல் பார்த்துக்கொண்டு இந்திய அணி, அதன் பின் அடுத்தடுத்து விக்கட்டுகளை தாரைவார்த்தது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. மயங் அகர்வால் 28 ரன்னுடனும், ரிஷாப் பண்ட 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கட்டுகளும், ஹசெலவுட் 1 விக்கட்டும் கைப்பற்றியுள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news