நரிக்குறவர் குழந்தையை மீட்க உதவிய லதா ரஜினிகாந்த்!

காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி என்ற பகுதியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த வெங்கடேசன், காளியம்மாள் என்ற தம்பதியினரின் ஹரிணி என்ற 2 வயது குழந்தை தெருவில் விளையாடிகொண்டிருந்த கடந்த 2018 செப்டம்பர் 15ம் தேதி திடிரென மாயமானது.

இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அனைக்கட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த காளியம்மாள் குழந்தையை மீட்டு தரும் வரை காவல்நிலையத்தை விட்டு செல்லமாட்டோம் என்று அங்கேயே தங்கினர்.

இதன் பிறகு தான் சிறுமி ஹரிணியை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். இதற்கிடையில் வாலிபர் ஒருவர் குழந்தையை கடத்தி சென்றதாக காஞ்சிபுரம் போலீஸ் எஸ்பி சந்தோஷ் ஹதுமானி ஒரு புகைப்படத்தை வெளிடிட்டார்.

ஆனால், அதன்பிறகு சுமார் 90 நாட்களுக்கு மேல் ஆகியும் காணாமல்போன குழந்தைபற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ஹரிணியின் பெற்றோரை நேரில் அழைத்து தாங்கள் நடத்தி வரும் குழந்தைகள் நல அமைப்பு மூலம் ஹரிணியை தொடர்ந்து தேடி வருவதாகவும் மும்மையில் சிறுமி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதக அவர்களிடம் கூறி ஆறுதல் அளித்தார்.

இந்நிலையில், 100 நாட்களுக்கு பின்னர் காணம்போன சிறுமி ஹரிணியை போலீசார் காஞ்சிபுரம் மாவட்டம் திருபோரூர் பகுதியில் மீட்டனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news