Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலாகும் நரகாசூரன் படத்தின் முன்னோட்ட காணொளி வெளியீடு. காணொளி உள்ளே

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்தவர்தான் இயக்குனர் கார்த்திக் நரேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. துருவங்கள் பதினாறு படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் புதிய படம்தான், நரகாசூரன் ஆகும்.

இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, மலையாள நடிகர் இந்திரஜித், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், துருவங்கள் பதினாறு படத்தில் பணிபுரிந்தவர்கள்தாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் டீஸர் வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருந்தது. பின்னர் படத்தை பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. கெளதம் மேனன் – கார்த்திக் நரேன் இடையேயான சில பிரச்சனைகளால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் இந்த வருட தொடக்கத்தில் வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் ஏழு மாதங்கள் தள்ளிப்போனது. படக்குழு தற்போது படத்தை தணிக்கை குழுவினருக்கு அனுப்பி யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. நரகாசூரன் படம், ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு.

அதை, கார்த்திக் நரேன் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இன்னிலையில் இந்த படத்தின் முன்னோட்ட காணொளி சில மணித்துளிகள் முன்னதாக வெளியாகி, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தின் முன்னோட்ட காணொளி மேலே கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news