Inandoutcinema - Tamil cinema news

தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்த நடிகர் சங்கம் – விவரம் உள்ளே

இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், கோவை சரளா, பசுபதி உள்ளிட்ட பலர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த துணை தலைவர் பொன்வண்ணன், நிருபர்களிடம் கூறியதாவது : சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததற்கு முதலமைச்சருக்கு நேரில் நன்றி தெரிவித்தோம். திரைப்பட விருதுகள் வழங்கும் விழா விரைவில் நடைபெறும் என முதலமைச்சர் உறுதி அளித்தார். நடிகர் சங்க கட்டட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அரசு பொருட்காட்சியில் அரசு திட்டங்களை விளக்கும் நாடக கூட்டங்களில் நடிக்கும் நாடக கலைஞர்களின் ஊதியத்தை 2 மடங்கு உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்தனர். 5 கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் முன் வைத்தோம். இதில் தமிழக திரைத்துறை, நூற்றாண்டை கடந்துள்ள அதே வேளையில், பல கலைஞர்களும் நூற்றாண்டை கடந்துள்ளனர். இவர்களை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களது குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். நாடகத்துறையில் பல கலைஞர்கள் வறுமையில் உள்ளதால் அவர்களுக்கு அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கவும், உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம் என துணை தலைவர் பொன்வண்ணன் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news